2 சவரன் நகைக்காக நடந்த கொடூரம்.. மூதாட்டியை கொடூரமாக வெட்டிக் கொன்ற தம்பதி கைது!

 
விஜயா

சென்னை எம்ஜிஆர் நகர் மயிலை சிவமூர்த்தி தெருவை சேர்ந்தவர் விஜயா (வயது 78). இவர் அருகில் உள்ள உணவகத்தில் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே கடந்த 17ம் தேதி வழக்கம் போல் வீட்டில் இருந்து வேலைக்கு சென்ற மூதாட்டி வீடு திரும்பவில்லை. இதைத் தொடர்ந்து அவரது மகள் லோகநாயகி அக்கம் பக்கத்தில் தேடியும் விஜயா குறித்து எந்தத் தகவலும் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த எம்ஜிஆர் நகர் காவல் துறையினர் கடந்த 23ம் தேதி விஜயாவை பற்றி விசாரிக்க நேரில் வருமாறு விஜயாவின் பக்கத்து வீட்டில் வசிக்கும் பார்த்திபனை அழைத்தனர். ஆனால் பார்த்திபன் தனது மனைவி சங்கீதாவுடன் திடீரென மாயமானார். இதனால் சந்தேகமடைந்த காவல் துறையினர் பார்த்திபனை தீவிரமாக தேடி வந்தனர்.

இறுதியில் விருதுநகரில் பதுங்கியிருந்த இருவரையும் போலீசார் கைது செய்து விஜயாவை பற்றி தீவிர விசாரணை நடத்தினர். அப்போது இருவரும் மூதாட்டியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். மேலும் அவர் அணிந்திருந்த 2 சவரன் நகைக்காக மூதாட்டியை கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டி மூட்டையில் போட்டது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!