பேரனை பழிவாங்க மூதாட்டியை தீர்த்துக் கட்டிய கொடூரம்.. அதிர்ச்சி பின்னணி!

 
பாக்யம்

எண்ணூரில் வீட்டு வாசலில் அமர்ந்திருந்த மூதாட்டியை வெட்டிக் கொன்றுவிட்டு பைக்கில் தப்பிச் சென்ற கும்பலை தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர் சென்னை நூர் சத்தியவாணிமுத்து நகர் 2வது தெருவை சேர்ந்தவர் பாக்யம் (65). இவர் நேற்று இரவு வீட்டு வாசலில் தனியாக அமர்ந்திருந்தார்.

அப்போது பைக்கில் வந்த 3 பேர் மூதாட்டியை சுற்றி வளைத்தனர். பின்னர் தாங்கள் வைத்திருந்த கத்தியால் மூதாட்டியை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்துவிட்டு, தலை மற்றும் கழுத்தில் பலத்த வெட்டுக்காயங்களுடன் வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மூதாட்டியை உடனடியாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், பாக்கியம் பரிதாபமாக இறந்தார்.

உதவி போலீஸ் கமிஷனர் வீரகுமார் உத்தரவின்படி எண்ணூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். பாக்கியத்தின் பேரன் மகி (22). இவரும் எண்ணூரை சேர்ந்த சந்தோஷ்குமார், விக்னேஷ் ஆகியோர் நெருங்கிய நண்பர்கள். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் எண்ணூர் அண்ணாநகரை சேர்ந்த ஜீவானந்தம் (25) என்பவருக்கும், மேற்கண்ட மூவருக்கும் இடையே பெண்ணை காதலிப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டது.

இந்த பிரச்னை முற்றிய நிலையில் கடந்த மாதம் 3 பேரும் சேர்ந்து ஜீவானந்தத்தை வெட்டி காயப்படுத்தினர். இந்நிலையில், மூவரும் சிறைக்கு சென்று, கடந்த வாரம் ஜாமீனில் வெளியே வந்தனர். சிகிச்சை முடிந்து ஜீவானந்தம் வீடு திரும்பினார்.இந்நிலையில், தன்னை வெட்டியவர்களை பழிவாங்க முடிவு செய்த ஜீவானந்தம், நேற்று முன்தினம் இரவு நண்பர்கள் 2 பேருடன் பைக்கில் எண்ணூர் பகுதியில் சுற்றி வந்தார்.

கொலை

அப்போது அவரை தாக்கிய 3 பேரும் சிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஜீவானந்தம் மற்றும் அவரது நண்பர்கள் பைக்கில் சத்தியவாணி முத்துநகர் வந்து அங்கிருந்த மகியின் பாட்டி பாக்கியத்திடம் விசாரித்தனர். அப்போது, பேரன் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை என்று கூறிய அவரை சரமாரியாக வெட்டிக் கொண்டு தப்பினர் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து தனிப்படை போலீசார் ஜீவானந்தம் மற்றும் அவரது கூட்டாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web