நேத்து போன கரண்ட் இன்னும் வரல... பொதுமக்கள் துறைமுக சாலையில் மறியல்!

 
மறியல்

தமிழகம் முழுவதும் பல  பகுதிகளில் வெயில் கொளுத்தி வருகிறது. இதனையடுத்து அனைவரும் ஏசி ரூமை விட்டு வெளியில் வருவதே இல்லை. இதனால் தமிழகத்தின் மின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை ஈடு செய்ய பல்வேறு செயல்பாடுகளை  தமிழக அரசு மின் உற்பத்தி மற்றும் பகிர்கான கழகம் மேற்கொண்டு வருகிறது.  

மறியல்

இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மின் உபயோகம் அதிகரித்து உள்ளது.  அதனை பூர்த்தி செய்யும் வகையில் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருவதாகவும் விளக்கம் அளித்துள்ளது.இந்நிலையில் நேற்று இரவு முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் திருவள்ளூரில் பொதுமக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.

போலீசார் கலவரம் காவல்துறை மறியல் போராட்டம்

இதனை கண்டித்து இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சென்னை துறைமுகம் செல்லும் சாலையில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  காமராஜர் துறைமுகம் வழியாக  வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் அரசு அதிகாரிகளும் காவல்துறையினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web