அட்சய திருதியைக்கு என்னென்ன வாங்கினால் செல்வம் பெருகும்? முழு விபரம்!

 
இன்று அட்சய திருதியை இதை வாங்க மறக்காதீங்க!

இன்று அட்சயதிருதியையன்று தங்கம் மட்டுமல்லாமல் என்னென்ன வாங்கினால் செல்வம் பெருகும் என்று பார்க்கலாம் வாங்க. தங்கம் வாங்க முடியாதவர்கள் கவலையே படாமல் இவற்றின் வாங்கி பயனடையலாம். ஒவ்வொரு மாதமும் அமாவாசை அடுத்த மூன்றாவது நாள் திருதியை திதி அனுசரிக்கப்படுகிறது. ஆனால் சித்திரை மாதத்தில் வரும் வளர்பிறை திருதியை தினத்தில் தான் அட்சய திருதியை அனுசரிக்கப்படுகிறது. இதே நாளில் தான் திருமால் மகாலட்சுமிக்கு தம் மார்பில் நித்திய வாசம் செய்ய   இடமளித்தார். அத்துடன் இதே நாளில்தான் செல்வத்தின் அதிபதிகளான ஆதிலட்சுமி, தான்ய லட்சுமி, தைரிய லட்சுமி, கஜ லட்சுமி, சந்தான லட்சுமி, விஜயலட்சுமி, வித்யா லட்சுமி, தன லட்சுமி என எட்டு லட்சுமிகளும் அஷ்ட லட்சுமிகளும் தோன்றிய தினம். இந்நன்னாளில் பொன், பொருள் வாங்கினால் அது மேலும் மேலும் வளர்ந்து செழிக்கும்.

அட்சய திருதியை

அட்சயம் என்பது அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம்.இந்த நாளில் தங்கம் வெள்ளி தான் வாங்க வேண்டும் என்பதில்லை. எந்த மங்களகரமான பொருள் வாங்கினாலும் பெருகும். அஷ்ட லட்சுமிகளின் கடாட்ஷமும் கிடைக்கும். அட்ஷய திருதியை அன்று தானியங்கள், உப்பு, மஞ்சள், விளக்கு, வெண்கல மணி, லட்சுமி படம், பணம், குங்குமச்சிமிழ், சந்தனம், சர்க்கரை என மங்கலகரமான பொருட்கள் எதுவேண்டுமானாலும்  வாங்கலாம். 

அட்சய திருதியை
தங்கம் குருவையும், வெள்ளி சுக்கிரனையும் குறிக்கும். இவர்களின் அருள் நீடித்தால்  வீட்டில் செல்வம் பல்கி பெருகும் என்பது காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கை.   

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி! 

From around the web