இந்தியா- பாகிஸ்தான் போட்டி நடைபெறும் நாள் .... ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தகவல்கள்... !

 
இந்தியா பாகிஸ்தான்


 
சர்வதேச டி20 போட்டியில் இந்தியா கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. 17 வருடங்களுக்கு பிறகு கோப்பையை வென்று இன்று நாடு திரும்பிய ரசிகர்களுக்கு அதிகாலையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் விருந்தளித்து வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். இந்நிலையில் 8 ஆண்டுகளுக்கு பிறகு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர்  மீண்டும் நடைபெற உள்ளது.  

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி

இந்த போட்டி அடுத்த வருடம் பிப்ரவரி 19ம் தேதி முதல் மார்ச் 9ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.இந்த போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய 8 அணிகள் இடம் பெற்றுள்ளது. இந்தப் போட்டி பாகிஸ்தான் நாட்டில் நடைபெறும் நிலையில் பிசிசிஐ தவிர்த்து மற்ற 7 நாடுகளும் அதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி


 பாகிஸ்தான் மற்றும் இந்தியா மோதும் போட்டிகள் லாகூரில் மார்ச் 1ம் தேதி நடைபெறும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ள்ன.  பாகிஸ்தானுக்கு சென்று இந்திய அணி விளையாடினால் இந்தியா விளையாடும் அனைத்து போட்டிகளும் பாதுகாப்பு கருதி லாகூரில் நடத்தப்படும்.  2008 ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பைக்குப் பிறகு இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  பிசிசிஐ மத்திய அரசிடம் அனுமதி வாங்கி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் சென்று விளையாடுமா இல்லையா என்பது குறித்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web