ஜூலை 21 கடைசி தேதி... மத்திய அரசில் 1340 காலிப்பணியிடங்கள்!
மத்திய அரசில் பல்வேறு அமைச்சகங்களில் உள்ள இளநிலை பொறியாளா் பிரிவில் 1,340 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது குறித்து மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் எனப்படும் எஸ்.எஸ்.சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களில் கட்டுமானப் பொறியியல் (சிவில்), இயந்திரவியல் (மெக்கானிக்கல்), மின்னியல் (எலக்ட்ரிக்கல்) பிரிவில் 1,340 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கான தோ்வுக்கு ஜூலை 21ம் தேதிக்குள் https://ssc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி தேதி : ஜூலை 22
விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள கடைசி தேதி : ஆகஸ்ட் 1 மற்றும் 2

கல்வித்தகுதி : என்ஜீனியரிங் முடித்தவர்கள்
ஆன்லைன் தேர்வு : அக்டோபா் மாதம்
தமிழகத்தில் சென்னை, வேலூர், கிருஷ்ணகிரி, சேலம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி மற்றும் புதுச்சேரி ஆகிய மையங்களில் இத்தோ்வு நடைபெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
