அள்ள அள்ள சடலங்கள்... வயநாட்டில் பலி எண்ணிக்கை 282 ஆக உயர்வு!
கேரளாவில் வயநாட்டில் தொடர் கனமழை காரணமாக அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. இரவு பகலாக மீட்பு பணிகள் நடந்து வருகிறது. ஒட்டுமொத்த தேசத்தையும் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது கேரள நிலச்சரிவு. கேரள நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 282 ஆக உயர்ந்துள்ளது. மீட்பு பணிகளின் போது மண்ணைத் தோண்டும் இடங்களில் எல்லாம் சடலங்கள் உருக்குலைந்து மனதை உலுக்கியெடுக்கிறது.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி பகுதிகளில் தொடர்ந்து பெய்து வந்த கனமழையால் அடுத்தடுத்து வயநாட்டில் 3 முறை நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சுமார் 500 வீடுகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலச்சரிவில் குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்துள்ளனர்.

வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் நேற்று 2வது நாளாக மீட்பு பணி நடைபெற்று வந்தது. இரவு பகலாக மீட்பு பணிகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. நிலச்சரிவில் சிக்கிய ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், தற்போது வரை பலி எண்ணிக்கை 270 ஆக உயர்ந்துள்ளது. 94 உடல்கள் அடையாளம் காணப்பட்டு பிரேத பரிசோதனைக்கு பின், இதுவரை 64 உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

225 பேரின் விவரம் தெரியாததால், தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 400க்கும் மேற்பட்ட வீடுகளில் 40 வீடுகள் மட்டுமே மீதம் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பலர் காணாமல் போனதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
