காங்கிரஸ் தொண்டரின் கன்னத்தில் பளார் விட்ட துணை முதல்வர்... வைரலாகும் வீடியோ!

கர்நாடக துணை முதல்வர் சிவக்குமாருடன் புகைப்படம் எடுக்க முயன்ற தொண்டரை அவர் கன்னத்தில் அறைந்த வீடியோவை பாஜக வெளியிட்டு பரபரப்பை கிளப்பி உள்ளது. மக்களவை தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. கர்நாடகாவில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது. பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கும் மாநில கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் எம்.பி பிரஜ்வல் வீடியோ விவாகரத்தை முன்னிறுத்தி காங்கிரஸ் அங்கு அரசியல் நடத்துகிறது. அதற்கு பதிலடியாக காங்கிரஸ் தொண்டரை கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் அறையும் வீடியோவை பாஜக தற்போது வெளியிட்டது
DCM @DKShivakumar slaps Congress Municipal Member during campaign..! Video goes viral.
— BJP Karnataka (@BJP4Karnataka) May 5, 2024
Last night, DK Shivakumar campaigned in Savanur town of Haveri for Congress candidate Vinoda Asooti.
Congress workers were chanting "DK DK" as DK Shivakumar arrived for campaigning. One of… pic.twitter.com/KOx6EvPAyX
ஹாவேரி நகரில் சவானூர் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வினோடா அசூட்டி என்பவருக்கு வாக்குகள் கேட்டு, கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அதற்காக காரில் வந்து இறங்கிய சிவக்குமாரை தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.அப்போது, கட்சி தொண்டர்களில் ஒருவர் சிவக்குமாரின் தோள் மீது கை போட்டு, புகைப்படம் எடுப்பதற்காக கேமராவுக்கு முன் தயாரானார். இதனால், ஆத்திரமடைந்த சிவக்குமார் உடனடியாக அவரை அறைந்து, கையை தள்ளி விட்டு சென்றார். உடன் இருந்த பாதுகாவலர்களும் அவரை பிடித்து தனியே கொண்டு சென்றனர்.
அறை வாங்கியவர் நகராட்சி உறுப்பினர் அலாவுதீன் மணியார் என்பது பின்னர் தெரியவந்தது. இந்த வீடியோவை பா.ஜ.க.வின் ஐ.டி. பிரிவு தலைவரான அமித் மாளவியா வெளியிட்டுள்ளார். அவரது பதிவில், காங்கிரஸ் தொண்டர்கள் இன்னும் காங்கிரசுக்காக பணியாற்ற வேண்டும் என ஏன் விரும்புகின்றனர்? என்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது.
அவர்களுடைய தலைவர்கள் அறைகின்றனர். அவமதிப்பு செய்கின்றனர். போட்டியிட வாய்ப்பு தருவதில்லை. தொண்டர்கள் அனைவரும் ஓரம் கட்டப்படுகின்றனர். ஊழல் பணத்திற்காகவா அவர்களின் பக்கம் நிற்கின்றனர்? சுயமரியாதை இல்லையா? என கேட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!