லண்டனில் உதயநிதி... விளையாட்டுத்துறை அமைச்சர் விளையாட்டுத்தனமாக இருக்காரு... எதிர்கட்சி துணைத்தலைவர் பேட்டி!

 
உதயநிதி

 நீட் தேர்வு ரத்து ரகசியம் பற்றி எந்த கவலையும் இல்லாமல் லண்டனில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி விளையாட்டுத்தனமாக சுற்றுலாவில் இருக்கிறார் என்று தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேட்டியளித்துள்ளார். 

திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய ஆட்சி மூன்றாண்டு முடிந்து, நான்காவது அடியெடுத்து வைக்கிற இந்த நேரத்தில், இந்த அரசை வழி நடத்தி வருகின்ற ஸ்டாலின் அவர்களே மக்களுக்கு  520 வாக்குறுதிகள் என தம்பட்டம் அடித்ததை முழுமையாக எப்பொழுது நிறைவேற்றப் போகிறீர்கள்.
குறிப்பாக மாணவர்களுக்கு கல்வி கடன் ரத்து என்கிற அந்த திட்டத்தை எப்போது  நிறைவேற்றுகிற காலம் கனியும் என்று மாணவர்கள் காத்திருக்கின்றார்கள். அதே போல மின்சார கட்டணத்தை விண்ணை முட்டுகிற அளவிலே நீங்கள் உயர்த்திருக்கிறீர்கள். நாங்கள் மின்சார கட்டணத்தை ஏற்ற மாட்டோம் என்று வாக்குறுதி அளித்தீர்கள். ஆனால் மின் கட்டணத்தை  ஏற்றி விட்டீர்கள் .

உதயநிதி
அதேபோல மாதம் ஒரு முறை மின் கணக்கீடு பணிகளை மேற்கொள்வோம் என்று சொன்னீர்கள். அதையும் நிறைவேற்றவில்லை.  நீங்கள் செய்வோம் என்று சொன்னதை நிறைவேற்றவில்லை. எதை செய்ய மாட்டோம் என்று சொன்னீர்களோ அதை செய்துள்ளீர்கள்.
மக்களை வாக்கு வங்கிக்காக ஏமாற்றுகிற வாக்குறுதிகளை நீங்கள் கொடுப்பது என்பது மிகப்பெரிய அளவிலே மக்களிடத்திலே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஏமாற்ற வேண்டும் என்று சொன்னால் அவர்களின் ஆசையை தூண்ட வேண்டும். மக்களுக்கு பேராசையை  செயற்கையாக தூண்டிவிட்டு அதிலேயே வாக்கு வங்கிக்காக குளிர்காய நினைக்கிற உங்கள் அரசியல் இன்றைக்கு கேள்விக்குறியாகி இருக்கிறது.
கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம நீங்கள் நினைவிலே வைத்துக் கொள்கிறீர்களோ, இல்லையோ மக்கள் இன்றைக்கு கேள்வி எழுப்ப ஆரம்பித்திருக்கிறார்கள். அதனால் நீங்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். 

உதயநிதி
மக்கள் கவலை பற்றி உங்களுக்கு கவலை இல்லை ஏனென்றால் நீட் தேர்வை ரத்து ரகசியம் எங்களிடத்தில் இருக்கிறது என்று சொன்ன உதயநிதி லண்டனில் இருக்கிறார் . ஆனால்  இங்கே ஒன்றரை லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதிக் கொண்டிருக்கிறார்கள். நீட் தேர்வு ரத்து ரகசியத்தை பற்றி கவலைப்படாமல் கடல் கடந்து லண்டனில் குடும்பத்தோடு சுற்றுலா சென்று முகாமிட்டுள்ளார்.
மாணவர்களுக்கு வழிகாட்டும் இளைஞர் நலம் , விளையாட்டு துறை அமைச்சர் விளையாட்டு தனமாக உள்ளார். இது எல்லாம் அவர் காதுக்கு எட்டுமா?
தேர்வுக்கு பின் மாணவ மாணவிகளுடைய எதிர்காலத்திற்கான அடித்தளத்தை அமைகின்ற இந்த காலமாகும். இந்த காலத்திலே அவர்களுக்கு ஒரு உரிய வழிகாட்டுதலை வழங்க வேண்டியது அரசுனுடைய கடமை, ஆனால் அமைச்சர்  அதன் கடமையிலிருந்து இன்றைக்கு தவறி லண்டன் சுற்றுலா சென்று இருப்பது மக்களிடத்திலே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தலைவர்கள் முதல் எம்எல்ஏ, தொண்டர்கள் வரை சுற்றுலா மேற்கொண்டுள்ள நிலையில், திமுக இப்போது சுற்றுலா மேம்பாட்டு கழகமாக மாறி இருக்கிறது. அரசு செயலிழந்து இருக்கிற இந்த நிலை மாற வேண்டும் என்று மக்கள் எதிர்பார்த்து  தீர்ப்பளித்துள்ளார்கள். ஆகவே திமுக அரசு மாணவர் கல்வி கடனை ரத்து செய்ய முன்வர வேண்டும், மாதம்  ஒரு முறை மின்கட்டண கணக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறினார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web