“ஒரு உசிர் போனா கூட மாவட்ட காவல் அதிகாரிகளே பொறுப்பு” ... ஸ்டாலின் அதிரடி உத்தரவு!

 
சட்டப்பேரவை

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து பலியானவர்கள் எண்ணிக்கை 69 ஆக அதிகரித்துள்ளது. எதிர்க்கட்சிகள் இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என கண்டனம் தெரிவித்து வருகிறது . சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்று  மதுவிலக்கு அமலாக்க திருத்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என முதல்வர் திடீர் சட்டதிருத்தத்தை  கொண்டு வந்துள்ளார்.

ஸ்டாலின்

இதனைத் தொடர்ந்து பேசிய முதல்வர் தமிழகத்தில் இனி கள்ளச்சாராய உயிர் பலிகள்  நடக்குமானால் அதற்கு அந்தந்த மாவட்ட காவல்துறை அதிகாரியும் எல்லைக்குட்பட்ட காவல் நிலைய அதிகாரியும்தான் பொறுப்பேற்க வேண்டும்.  அதே நேரத்தில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் எஸ்.பி.க்கள் ஆய்வுக் கூட்டத்தில் இது குறித்து  கடுமையான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது என  கூறியுள்ளார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web