தமிழகத்தில் தொடரும் அவலம்... வெறிநாய் கடித்து 15 பேர் மருத்துவமனையில் அனுமதி!

 
வெறிநாய்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெறிநாய்க்கடி சம்பவங்கள் அரங்கேறி பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றன. சில நாட்களுக்கு முன் சென்னையில் பூங்கா ஊழியர்  மகள் 5 வயது சிறுமியை நாய்கள் கடித்து குதறிய சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து நாய் வளர்ப்பவர்களுக்கு மாநகராட்சி கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. ஆனாலும் நாய்க்கடி சம்பவங்கள் குறைந்தபாடில்லை.

நாய்

தேனி மாவட்டம் கடமலைக்குண்டு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடிக்கடி வெறிநாய் தாக்குதல் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன.  2 மாதங்களுக்கு  முன் வருசநாடு பகுதியில் வெறிநாய் கடித்ததில் ஒரே நாளில் 13 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இந்நிலையில், நேற்றிரவு கடமலைக்குண்டு  குமணந்தொழு, ஆலந்தளிர் பகுதிகளில் வெறிநாய்கள் கடித்ததில் 2 சிறுவர்கள் உட்பட  15 பேர் காயமடைந்தனர். இதையடுத்து படுகாயம் அடைந்த 15 பேருக்கும் கடமலைக்குண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. 

நாய்
நாய் கடித்து சிகிச்சைக்கு வந்தவர்களுக்கு  தொடர்ந்து குறிப்பிட்ட நாட்களுக்குள் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.அதே நேரத்தில் அந்தப் பகுதியில் சுற்றித் திரியும் தெரு மற்றும் வெறிநாய்களை  பிடிக்கும் முயற்சியில்  ஊராட்சி நிர்வாகத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web