ஒரு குடும்பத்தையே காப்பாற்றிய வளர்ப்பு நாய்.. நெகிழ்ச்சி பின்னணி!

 
விதானலகே சோமசிறி

சீரற்ற காலநிலை காரணமாக இலங்கையில் பல இடங்களில் இயற்கை சீற்றங்கள் ஏற்படுகின்றன. பல மாவட்டங்களில் கனமழை மற்றும் பலத்த காற்று வீசியது. அதன் பிறகு நிலச்சரிவும் வெள்ளமும் ஏற்பட்டது. இதனால் பலரது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உடமைகளை இழந்துள்ளனர். இந்த நிலையில், தான் களுத்துறை, அகலவத்தை - பெல்லன பிரதேசத்தில் வசிக்கும் விதானலகே சோமசிறி என்ற குடும்பமே  இயற்கை சீற்றத்தில் சிக்க இருந்தது.

அதாவது வீட்டு நாய் வழக்கத்தை விட அதிக சத்தத்துடன் வீட்டின் பின்புறம் குரைத்துக் கொண்டிருந்தது. குடும்பத்தலைவர் வீட்டின் கதவைத் திறந்து வீட்டின் பின்புறம் பார்வையிட்டார். அப்போது, ​​நாய் ஏதோ சொல்வதை உணர்ந்த தாய், தந்தை, மனைவி, குழந்தை ஆகியோர் வீட்டை விட்டு வெளியேறினர். வீட்டை விட்டு வெளியே சென்ற சிறிது நேரத்தில் வீட்டின் பின்புறமுள்ள மலை முற்றிலும் சரிந்து வீட்டின் மீது விழுந்தது தெரியவந்தது.

இந்நிலையில், தங்கள் வீட்டின் வளர்ப்பு நாயான களுவால் தங்கள் உயிரை காப்பாற்றியதாக உரிமையாளர் கண்ணீருடன் தெரிவித்தார். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web