விபத்தில் சிக்கிய லாரி ஓட்டுநர்.. உதவி கேட்டும் கண்டுக்கொள்ளாத மக்கள்.. அதிர்ச்சி வீடியோ வைரல்!

 
 லாரி ஓட்டுநர்

எவ்வளவுதான் நவீன நாகரீகம் வளர்ந்தாலும் முந்தைய காலத்தில் மக்களிடையே காணப்பட்ட பாசம், பண்பு, சகிப்புத்தன்மை, மனிதாபிமானம் ஆகியவை இன்றைய மக்களிடம் குறைவாகவே உள்ளன. பணத்திற்கான ஓட்டம் மக்களிடையே மிகவும் பொதுவானது. மேலும், பணத்திற்காக கொள்ளை, பாலியல் வன்கொடுமை, கொலை போன்ற சம்பவங்களும் நாடு முழுவதும் அதிகரித்து வருகின்றன.


இதற்கிடையில் இணையத்தின் தாக்கத்தால் உலகின் எந்த மூலையில் என்ன சம்பவங்கள் நடந்தாலும் உடனடியாக சமூக வலைதளங்களில் பரவுகிறது. அந்த வகையில், தற்போது வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 31 வினாடிகள் கொண்ட வீடியோவில், லாரி ஒன்று விபத்துக்குள்ளானது. லாரியின் முன்பக்க கண்ணாடி உடைந்து, ஓட்டுநரின் முகத்தில் ரத்தக்கறை உள்ளது. அப்போது அவர் உதவி கேட்பதாக தெரிகிறது. ஆனால் அங்கிருந்தவர்கள் அவர் சொல்வதைக் காதில் வாங்காமல் அவரிடம் இருந்த பணப்பையையும் செல்போனையும் பறித்துச் சென்றனர்.

இறுதியில் அவர் இறந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் கர்நாடகாவில் நடந்ததாக கூறப்படுகிறது. “ மனிதநேயம் செத்துவிட்டது...” என்ற தலைப்பில் சினேகா மொர்தானி வெளியிட்ட வீடியோவை பார்த்த பல பயனர்கள் இது மிகவும் வருத்தமாகவும், கேவலமாகவும் உள்ளது என தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web