துறைமுகத்தில் காருடன் கடலில் விழுந்த ஓட்டுனர் உடல் மீட்பு!

 
முகமது ஷாதி

 சென்னை துறைமுகத்தில் காருடன் கடலில் விழுந்த ஓட்டுநரின் உடல் மீட்கப்பட்டது. இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.டிசம்பர் 17 ம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு கடலோரக் காவல்படை அதிகாரி ஒருவரை அழைத்துச் செல்வதற்காக வந்த முகமது ஷாகி வந்துள்ளார். இவர் காரை ரிவர்ஸ் எடுத்தபோது தவறி கடலில் விழுந்ததாகவும், இதனால் விபத்து நிகழ்ந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகமது ஷாதி


சென்னை துறைமுகத்தில் கடலோர காவல்படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை பணிக்காக துறைமுகத்திற்கு அழைத்துச்சென்று வர  வாடகை கார் ஒப்பந்த அடிப்படையில் செயல்பட்டு வருகிறது.  இந்த காரை கொடுங்கையூரை சேர்ந்த 32 வயது முகமது சாதி  என்பவர் ஓட்டி வந்தார்.இரவு 9 மணிக்கு  கடலோர காவல் படை வீரர் ஒருவரை ஏற்றிக்கொண்டு வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரென துறைமுகத்தில் உள்ள கடலுக்குள் பாய்ந்தது. தகவல் அறிந்ததும்  விரைந்து வந்த கடலோர காவல் படை வீரர்கள் கடலில் மூழ்கி கிடந்த காரில் இருந்து காவல் படை வீரரை மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

முகமது ஷாதி

காருடன் பாய்ந்து மாயமான டிரைவர் முகமது சாதியை தீவிரமாக தேடி வந்த நிலையில் இன்று  கடலில் விழுந்து மாயமமான டிரைவர் முகமது சாதி  சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கார் கடலுக்குள் பாய்ந்த பகுதியில் இருந்து 100 மீட்டர் தொலைவில் இறந்த நிலையில் முகமது சாதி சடலமாக மீட்கப்பட்டு  உடல் பிரேத பரிசோதனைக்கு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!