ஜூன் 6ஆம் தேதி வரை அமலில் இருக்கும் தேர்தல் விதிமுறைகள்.. சத்யபிரதா சாகு அறிவிப்பு!

 
 சத்யபிரதா சாகு

தேர்தல் நடத்தை விதி முறைகள் ஜூன் 6-ம் தேதி வரை அமலில் இருக்கும்.அதன் பிறகு வாபஸ் பெறப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ; மின்னணு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டால், அந்த இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ண முயற்சிப்பார்கள்.

 சத்யபிரதா சாஹூ

இல்லையெனில் அந்த இயந்திரங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டு அடுத்த சுற்று எண்ணும் பணி தொடர்கிறது. இறுதி வாக்கு வித்தியாசம் குறைவாக இருந்தால், அந்த கட்டுப்பாட்டு இயந்திரத்துடன் இணைக்கப்பட்ட விவிபாட் உள்ளீடுகள் தேவைப்பட்டால் எண்ணப்படும். தேர்தல் வாக்கு எண்ணிக்கை குறித்து அரசியல் கட்சிகள் புகார் எதுவும் தெரிவிக்கவில்லை. ஒவ்வொரு சுற்றிலும் தேர்தல் பார்வையாளர்கள், தேர்தல் அதிகாரிகள் இறுதி செய்த தேர்தல் முடிவுகளை, தேர்தல் ஆணையம் பதிவேற்றம் செய்து வெளியிடுகிறது.

சத்யபிரதா சாகு

தேர்தல் நடைமுறைகள் முடிந்ததும், தேர்தல் முடிவுகள் குறித்த விவரங்களை, குடியரசுத் தலைவருக்கு தலைமை தேர்தல் ஆணையர் வழங்குவார். தேர்தல் நடத்தை விதிகள் ஜூன் 6-ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web