அட... தவறவிட்ட சிறுவனின் செருப்பை எடுத்துக் கொடுக்கும் யானை... நெகிழ்ச்சி வீடியோ !

 
யானை
 

உலகம் முழுவதும் தினமும் சமூக வலைதளங்களில் பல வகையான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. இதில் விலங்குகள் பறவைகள் சம்பந்தமான வீடியோக்கள் தான் வைரலாகி அதிக அளவில் பகிரப்பட்டு வருகின்றன. அந்தவகையில் சீனாவில் செயல்பட்டு வரும் உயிரியல் பூங்காவில் நடந்த ஆச்சர்ய சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி பெரும்பாலானவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.  

இந்த வீடியோவில் சிறுவன் ஒருவன் யானை கட்டப்பட்டிருக்கும் தொழுவத்திற்குள் சென்று பார்வையிட்டுக் கொண்டிருந்தான். அப்போது அந்த  சிறுவன் செருப்பை தவறவிட்டுள்ளான். யானை இந்த  செருப்பை எடுத்து  கருணையோடு திரும்ப கொடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சீனாவின்  ஒரு  உயிரியல் பூங்காவில் யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் யானைகளை பார்வையிட்டு சென்று விடுகின்றனர்.  அந்தவகையில் சிறுவன் ஒருவன் தன்னுடைய செருப்பை யானை தொழுவத்திற்குள் தவற விட்டுவிடுகிறான்.  

காட்டு யானை

அப்போது யானை அருகில்  பராமரிப்பாளர்கள் யாரும் இல்லாததால் சிறுவன் தவறவிட்ட செருப்பை யானை தன்னுடைய துதிக்கையால் எடுத்து வேலியை தாண்டி உயரமாக மேடையில் நிற்கும் சிறுவனிடம் கொடுத்தது.  சந்தோஷமாக சிறுவனும் அதை ஆவலுடன் பெற்றுக் கொண்டுள்ளான். புத்திசாலித்தனமும் கருணையும் மிகுந்த இந்த யானையின் செய்கை அங்கு நின்றவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.  இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில்  வைரலாகி வருகிறது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web