செல்லமாய் வளர்ந்த சிறுவன்... மொத்த குடும்பத்தையும் ஜெயிலில் சிக்க வைத்த கொடுமை!

 
 புனே விபத்து

மகாராஷ்டிர மாநிலம் புனே நகரின் கல்யாணி நகர் பகுதியில் 12 ம் வகுப்பு படித்து வந்த   17 வயது சிறுவன்  12ம் வகுப்பில் தேர்ச்சி அடைந்தார். இதனை கொண்டாட நண்பர்களுடன் பப்புக்கு வீட்டில் ர் இருந்த காரை எடுத்து சென்றுள்ளார். குடிபோதையில் சொகுசுக்காரை ஓட்டி சென்ற சொகுசு கார் சிறுவன்  ஏற்படுத்திய விபத்தில் 2 ஐடி ஊழியர்கள் பலியாகினர். சுமார் 200 கிலோமீட்டர் வேகத்தில் காரை சிறுவன் ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த வழக்கில் போலீசார் சிறுவனை கைது செய்து சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதில் சிறுவனுக்கு 15 மணி நேரத்தில் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. நாடு முழுவதும் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில்   அவரது ஜாமீன் ரத்து செய்யப்பட்டு, சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து சிறுவனுக்கு கார் வழங்கிய அவரது தந்தையும் கட்டுமான தொழிலதிபருமான விஷால் அகர்வால், சிறுவனுக்கு மது வழங்கியதாக மதுபானக் கூட உரிமையாளர் மற்றும் 2 ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். 

 புனே விபத்து
அத்துடன்  இந்த வழக்கில் சிறுவனுக்கு பதிலாக குடும்ப டிரைவரை சிக்கவைக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக சிறுவனின் தாத்தாவை  மருத்துவமனையில் சிறுவனின் ரத்த மாதிரியை மாற்றச்சொன்ன அவரது தாய்,  மருத்துவமனையின் தடயவியல் துறை தலைவர் அஜய் தவாரே, முதன்மை மருத்துவ அதிகாரி ஹரி ஹல்னார், மருத்துவமனை கடைநிலை ஊழியர் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.   சிறுவனின் தாயார் ஷிவானி அகர்வால்   ரத்த மாதிரி மோசடியை ஷிவானி செய்திருந்தார்.  எப்படியாகிலும் புனேயில் நடந்த குடிபோதையில் வாகனம் ஓட்டிய வழக்கில், முதலில் விபத்தை ஏற்படுத்திய மைனர் மகன், 17 வயது மகனிடம் காரை கொடுத்த தந்தை விஷால் அகர்வால், டிரைவரை சிக்க வைக்க முயன்ற தாத்தா சுரேந்திர அகர்வால், ரத்த மாதிரியை மாற்றிக் கொடுத்த தாய் ஷிவானி அகர்வால் என ஒருவனுக்காக  ஒட்டுமொத்த குடும்பமும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது. 

புனே போர்ஸே கார் விபத்து
இதற்கிடையே  விபத்து நடந்த நாளில் குடிபோதையில் காரை ஓட்டிச் சென்ற சிறுவனுடன் மேலும் 2 சிறுவர்கள் இருந்துள்ளனர். அந்த இரு சிறுவர்களிடம் இருந்து பெறப்பட்ட ரத்த மாதிரிகளும் சசூன் மருத்துவமனையில் பெறப்பட்டன . அவர்களது ரத்த மாதிரிகளும் மாற்றப்பட்டுள்ளது. இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில். மூன்று சிறார்களின் உறவினர்களும் மருத்துவமனைக்கு வந்தனர். 3 சிறுவர்களிடம் இருந்து பெறப்பட்ட ரத்த மாதிரிகள் மாற்றப்பட்டன.  விபத்தை ஏற்படுத்திய சிறுவனின் ரத்த மாதிரிக்கு பதிலாக அவரது தாயின் ரத்த மாதிரியும், மற்ற இரு சிறுவர்களின் ரத்த மாதிரிகளுக்கு பதிலாக அவரது 2 உறவினர்களின் ரத்த மாதிரியும் பெறப்பட்டுள்ளது.  

விபத்தை ஏற்படுத்தி 2 பேரை கொலை செய்த  சிறுவனை  காப்பாற்ற, முதலில் அவரது பெற்றோர் முயற்சித்தனர். அதற்காக மருத்துவ துறை, காவல் துறை அதிகாரிகளுக்கு ரூ. 3 லட்சம் வரை லஞ்சம் வழங்கியதாகத் தெரிகிறது. தொழிலதிபாரான தந்தை, தனது செல்வாக்கை பயன்படுத்தி தனது மகனை குற்ற வழக்கில் இருந்து காப்பாற்ற மேல்மட்ட அரசியல், அதிகார மட்டத்தில் இருப்பவர்களின் செல்வாக்கை பயன்படுத்தி உள்ளார். தனது மகனை காப்பாற்ற ரத்த மாதிரிகளை தாய் மாற்றிக் கொடுத்தார். இதற்கெல்லாம் உடந்தையாக இருந்த மருத்துவத்துறை, காவல் துறை அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளனர். மருத்துவ துறையை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். காவல் துறையை சேர்ந்த சிலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் மாநில அரசை எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. 

புனே காவல்துறைத் தலைவர்  'சங்கலி தொடர் போல் இவ்வழக்கின் போக்கு செல்கிறது. இவ்வழக்கில் சிறுவன், அவரது தந்தை, தாய், தாத்தா, மருத்துவமனையின் 2 மருத்துவர்கள், சிறுவனின் ரத்த மாதிரியை மாற்றிய ஊழியர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  12 தனிப்படைகள் அமைக்கப்பட்டு  100 போலீசார் இந்த வழக்கின் பல்வேறு தகவல்களை சேகரித்து வருகின்றனர் எனக் கூறியுள்ளார். 

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web