பதறிய குடும்பம்... ரயிலில் தவற விட்ட 50 சவரன் நகைகள்... பத்திரமாக ஒப்படைத்த ரயில்வே போலீசார்!
தங்கம் விற்கிற விலையில ஒரு கிராம் கம்மல் தொலைந்தாலே நாலு நாளைக்கு சோறு இறங்காது. அப்படியிருக்கையில் மொத்தமாக 50 சவரன் நகைகளை தவற விட்டிருந்தால் மனசு எப்படி பதைபதைத்திருக்கும். அப்படி சென்னையில் இருந்து கோவைக்கு குடும்பத்தினருடன் ரயிலில் செல்கையில், 50 சவரன் தங்க நகைகள், பணம், செல்போன் உள்ளிட்டவைகள் இருந்த பையை மறந்து ரயிலிலேயே விட்டுவிட்டு சென்ற நிலையில் செய்வதறியாது பதறி உள்ளனர். இந்நிலையில், அத்தனை நகைகளையும் பத்திரமாக ரயில்வே போலீசார் மீட்டு, உரியவரிடம் பத்திரமாக ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயில்வே போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.
கோவையைச் சேர்ந்தவர் ரவிக்குமார் (53). இவர் சென்னை சென்ட்ரலில் இருந்து கோவைக்கு தனது மனைவி மற்றும் மகளுடன் ரயிலில் சென்றுள்ளார். ரயில் கோவை சென்றடைந்ததும் தங்கள் பொருள்களுடன் இறங்கியவர்கள், அவர்கள் கொண்டு சென்ற ஒரு கைப் பையை ரயிலிலேயே தவறவிட்டுவிட்டனர். அதில் 50 சவரன் தங்க நகைகள் இருந்துள்ளன.

பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை காவலர் மணிகண்டன் ரயில் பெட்டிகளை ஆய்வு செய்த போது கைப்பை கிடப்பதை கவனித்து,அதனுள் நகைகள் இருப்பதை உறுதி செய்துள்ளார். இதையடுத்து உயர் அதிகாரிகளுக்கு தகவலளித்து விட்டு அலுவலகத்திற்கு அந்த கைப்பை கொண்டுச் சென்றார்.
இந்நிலையில், ரவிக்குமார் வீட்டிற்கு சென்று தனது பொருள்களை பரிசோதித்துள்ளார். அப்போது, கைப்பை ரயிலிலேயே தவறவிட்டதை உணர்ந்தவர், உடனடியாக கோவை ரயில் நிலையத்திற்கு விரைந்து வந்தார். அந்நேரத்தில் அந்த கைப்பையில் இருந்த ஒரு செல்போன் ஒலித்தது. அதில் ரவிக்குமார் தனது கைப்பை தொலைந்துவிட்டதாக கூறியிருக்கிறார். உடனே ரயில்வே பாதுகாப்புப் பிரிவு போலீஸ் அதிகாரிகள் அவரை அலுவலகத்திற்கு வருமாறு கூறியுள்ளனர்.

இதையடுத்து ரவிக்குமார் கூறிய அடையாளங்களை வைத்து அந்த கைப்பை அவருடையதுதான் என்பதை போலீசார் உறுதி செய்தனர்.அந்த கைப்பையில் இருந்த 50 பவுன் தங்க நகைகள் மற்றும் பணம், செல்போன் ஆகியவை பயணியிடம் பத்திரமாக ரயில்வே போலீசார் பத்திரமாக ஒப்படைத்தனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
