பகீர் வீடியோ... பட்டாசு வெடித்துக் கொண்டிருந்த குடும்பம்... அதிவேகத்தில் எமன் போல் ஏற்றிக் கொன்ற கார்!

சாலையில் பட்டாசு வெடித்த 3 பேர் மீது அதிவேகமாக வந்த கார் மோதிவிட்டு நிற்காமல் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் எல்டாகோ அமன்ட்ரன் செக்டார் பகுதியை சேர்ந்தவர் சவுரவ் சிங்(40). இவர் கடந்த 12ம் தேதி தீபாவளி அன்று இரவு தனது 8 வயது மகள் மற்றும் மாமனார் விஜயகுமார்(72) ஆகியோருடன் இணைந்து வீட்டின் முன்னால் உள்ள சாலையில் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டிருந்தார்.
दिवाली पर गौतमबुद्ध नगर में हिट एंड रन की दूसरी घटना : लाल कार ने मासूम बच्ची समेत 3 को कुचला, देखिए दिल दहला देने वाला Live Video@noidapolice @CP_Noida @Uppolice #Diwali
— Tricity Today (@tricitytoday) November 13, 2023
Full Story Link : https://t.co/ZwFqgBKYuP
Written by @mayank_tawer pic.twitter.com/Ju2c3z7amK
அப்போது, அதிவேகமாக வந்த கார் ஒன்று, சாலையில் நின்று கொண்டிருந்த 3 பேர் மீதும் மோதிவிட்டு, நிற்காமல் சென்றது. இதில் அவர்கள் மூவரும் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக மூவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் இந்த சம்பவத்திற்கு காரணமான நபர் கைது செய்யப்படுவார் என்றும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!