பிரபல பாடகி சென்ற கார் தடுப்பானில் மோதி விபத்து !! வைரலாகும் இன்ஸ்டா பதிவு!!

 
ரக்‌ஷிதா

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில்  பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி சூப்பர் சிங்கர் . இதில் சீசன் 6ல் கலந்து கொண்டு பிரபலமானவர் ரக்‌ஷிதா சுரேஷ். இவர் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்படவில்லை என்றாலும் இறுதிப்போட்டி வரை முன்னேறி 2வது இடத்தை பிடித்தவர். அதன்பிறகும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பாடி வந்த இவருக்கு பிரபல இசையமைப்பாளர் இளையராஜா தெலுங்கில் தான் பணியாற்றிய ‘எவடே சுப்ரமணியம்’ படத்தில் பாட வாய்ப்புக் கொடுத்தார்.

ரக்‌ஷிதா

இதன் மூலம்  சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகமானார். தெலுங்கு மற்றும் கன்னட மொழியில் பாடி வந்த இவருக்கு ‘வந்தால் ராஜாவாகத்தான் வருவேன்’ படத்தில் ஹிப்ஹாப் தமிழா வாய்ப்புக் கொடுத்தார். அதன் பிறகு  ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இந்தியில் ‘யானே யானே’, வெந்து தணிந்தது காடு படத்தில் இடம் பெற்ற ‘காலத்துக்கும் நீ வேணும்’, கோப்ரா படத்தில் ஏலே இளஞ்சிங்கமே, பொன்னியின் செல்வன் படத்தின் அகநக தெலுங்கு வெர்ஷன், வீர ராஜ வீரா பாடலின் கன்னட வெர்ஷன் உட்பட பல  பாடல்களை பாடி அசத்தியிருக்கிறார். 
அவர் இன்று மே 7ம் தேதி ஞாயிற்றுக்கிழமை  தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு மிகப்பெரிய விபத்தில் சிக்கியதாக தெரிவித்துள்ளார்.

ரக்‌ஷிதா

அந்த பதிவில் “இன்று நான் ஒரு பெரிய விபத்தைச் சந்தித்தேன். நான் இன்று காலை மலேசியாவில் உள்ள விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த போது என்னுடைய கார் சாலையின் நடுவில் இருந்த தடுப்பான் மீது மோதி சாலையில் ஓரத்தில் கவிழ்ந்தது. என்னுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையும் 10 நொடிகளில் என் கண்முன்னே வந்து சென்றது. காரில் இருந்த ஏர் பேக்கால் உயிர் பிழைத்தேன். மிக்க  நன்றி. இல்லையென்றால் நிலைமை இன்னும் மோசமாகி இருக்கும். நடந்தவற்றை நினைக்கும் போதே உடலில் பெரும் நடுக்கம் ஏற்படுகிறது. கார் ஓட்டுநர், நான் மற்றும் முன்னிருக்கையில் இருந்த அனைவருமே சிறு காயங்களுடன் உயிர் பிழைத்தோம்   எனப் பதிவிட்டு இருக்கிறார்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web