நாடு முழுவதும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் கட்டணம் உயர்கிறது... இந்தியன் ரயில்வே திடீர் முடிவு!

 
 எக்ஸ்பிரஸ் ரயில்

நாடு முழுவதும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த இந்தியன் ரயில்வே முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோ மீட்டருக்கு 2 பைசாவும், சாதாரண வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோ மீட்டருக்கு 1 பைசாவும் உயர்த்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்த கட்டண உயர்வு ஜூலை 1, 2025 முதல் நடைமுறைக்கு வரும் என்று கூறப்படுகிறது. இந்த முடிவு, ரயில்வேயின் செயல்பாட்டு செலவுகளை சமாளிக்கவும், சேவைகளை மேம்படுத்தவும் எடுக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.  

 எக்ஸ்பிரஸ் ரயில்

இருப்பினும், புறநகர் ரயில்கள் மற்றும் 500 கிலோ மீட்டருக்கு குறைவான தொலைவு பயணங்களுக்கு 2 ம் வகுப்பு டிக்கெட்டுகளுக்கு இந்த கட்டண உயர்வு பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது.  ரயில்வே அமைச்சகம் இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. 

 எக்ஸ்பிரஸ் ரயில்

ஆனால், இந்த கட்டண உயர்வு குறித்து பயணிகள் மத்தியில் விவாதங்கள் தொடங்கியுள்ளன. புறநகர் மற்றும் குறுகிய தூர பயணிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருப்பது நிவாரணமாக இருந்தாலும், நீண்ட தூர ஏசி வகுப்பு பயணிகளுக்கு இது கூடுதல் சுமையாக அமையலாம்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது