கதறும் விவசாயிகள்... டெல்டாவில் கனமழையால் 100 ஏக்கர் சம்பா மூழ்கியது!

 
விவசாயி


டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்றும் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டியது. திருச்சியில் நேற்று பகல் முழுவதும் வெயில் சுட்டெரித்த நிலையில் இரவு 7 மணிக்கு தொடங்கிய மழை 1.30 மணி நேரம் கொட்டியது. இதில் தாழ்வான பகுதிகள், வீதிகள், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல் திருச்சி புறநகர் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

விவசாயி

கரூரில் மாலை 6 மணி முதல் 9 மணி வரை மழை பொழிந்தது. மயிலாடுதுறை மாவட்டத்தில் மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களிலும் மழை பொழிந்தது.

விவசாயி

திருவிடைமருதூர் தாலுகா சன்னாபுரம், கோவில் சன்னாபுரம், திருவிடைமருதூர் ஆகிய இடங்களில் சில நாட்களுக்கு முன்பு நடவு செய்யப்பட்ட சுமார் 100 ஏக்கர் சம்பா இளம் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?