பகீர்... கையில காசில்ல... பிறந்து 15 நாள் ஆன குழந்தையை உயிருடன் புதைத்த தந்தை!

 
பாகிஸ்தான்

 பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள நவுசாகர் பெரோஸ் நகரத்தில் வசித்து வருபவர் தய்யாப். இவரது மனைவி கடந்த 15 நாட்கள் முன் பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இந்நிலையில் குழந்தையின் ஆரோக்கியம் குன்றியதால் சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் மிகுந்த ஏழ்மையில் வாழ்ந்து வந்த தய்யாபிடம் மருத்துவ செலவுக்கு பணம் இல்லததால், பச்சிளம் குழந்தையை உயிருடன் மண்ணில் குழிதோண்டி புதைத்துள்ளார். இதனால் குழந்தை மூச்சுத்திணறி உயிரிழந்ததாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  

பாகிஸ்தான்


இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் தந்தை தய்யாபை கைது செய்துள்ளனர். மருத்துவ செலவுக்கு பணம் இல்லத்ததால் குழந்தையை புதைத்தாக தாயாப் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் புதைக்கப்பட்ட குழந்தையின் உடலைக் கைப்பற்றி  பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 குழந்தை
இதனிடையே, லாகூர் பகுதியில் தம்பதி ஒன்று தங்களின் குடியிருப்பில் வேலை பார்த்து வந்த 13 வயது சிறுமியை தொடர்ச்சியாக பலமுறை நிர்வவணப்படுத்தி அடித்து துன்புறுத்தியதாக புகார் எழுந்தது.இந்த விவகாரத்தில் அந்த சிறுமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் ஹஸாம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது மனைவி தொடர்பில் நடவடிக்கை தொடரும் என்றே கூறப்படுகிறது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web