லிப்டுக்குள் ஸ்கூட்டருடன் நுழைந்த தந்தை... மருத்துவமனையில் பரபரப்பு வீடியோ!

 
லிப்ட் ஸ்கூட்டர்

காயமடைந்த தனது  மகனை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு ஸ்கூட்டரில் அழைத்துச் சென்ற தந்தை, அவசரம் கருதி ஸ்கூட்டர் ஓட்டிய நிலையிலேயே லிப்டிக்குள்ளும் ஸ்கூட்டரோடு நுழைந்து மருத்துவமனையின் மாடிக்கு செல்லும் வீடியோ வைரலாகி வருகிறாது. மகனுடன் மருத்துவர் இருக்கும் இடத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக நேராக ஸ்கூட்டர் ஓட்டியபடியே ற்குள் நுழைகிறார். 

பலரும் இந்த வீடியோவை ஷேர் செய்து, நண்பன் படத்தில் நடிகர் விஜய் ஸ்கூட்டர் ஓட்டிச் செல்லும் காட்சியுடன்  ஒப்பிட்டு வைரலாக்கி வருகின்றனர். திரைப்படக் காட்சியை மிஞ்சும் வகையில், நிஜத்தில் ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில், காலில் அடிபட்ட தனது மகனை மருத்துவமனைக்குள் இருசக்கர வாகனத்தில் அமர வைத்து அழைத்து சென்ற தந்தை, லிப்டிலும் ஸ்கூட்டரிலேயே பயணித்துள்ளார்.


தந்தையின் இந்த செயல் குறித்து மருத்துவமனை நிர்வாகத்தின் துணை கண்காணிப்பாளர் கர்னேஷ் கோயல் கூறுகையில், மனோஜின் ஸ்கூட்டரை வாசல் பகுதி வரை செல்லவே அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால், அவர் மருத்துவமனையின் லிப்டுக்குள் தனது மகனுடன் ஸ்கூட்டரை ஓட்டி சென்றுள்ளார் என தெரிவித்து உள்ளார்.

தந்தையின் கருத்து கேட்ட போது, காயமடைந்த மகனை அழைத்துச் செல்வதற்காக மருத்துவமனையின் வாசலில் வீல் சேர் வேண்டும் என்று மனோஜ் கேட்டதாகவும், மருத்துவமனையில் அவருக்கு தேவையான வீல்சேர் வசதி இல்லை என்றும் புகார் கூறப்பட்டது. வீல் சேர் இல்லாததால் மருத்துவமனை நிர்வாகம் அவரை ஸ்கூட்டருடன் மருத்துவமனையின் வாசல் பகுதி வரை மட்டுமே செல்ல அனுமதித்துள்ளனர். ஆனால், மகனின் மீதுள்ள பாசத்தால் அதனை மீறி அவர் லிப்டிற்குள் ஸ்கூட்டருடன் சென்று உள்ளார்.

Nanban

இப்படி ஸ்கூட்டருடன் லிப்டிக்குள் நுழைந்ததால், அவரது ஸ்கூட்டரின் சாவியை மருத்துவமனை நிர்வாகம் எடுத்து கொண்டது. எனினும், மனோஜ் கூறும்போது, மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் வீல்சேர் கேட்டேன். அவர்கள் அதனை வழங்கவில்லை. எனது மகனுடன் என்னுடைய மின்சார ஸ்கூட்டரில் லிப்டுக்குள் செல்லட்டுமா? என நான் கேட்டேன். அதற்கு அதிகாரிகள் அனுமதி அளித்த பின்னர் தான் சென்றேன் என கூறியுள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web