பனிமய மாதா பேராலயத்தின் திருவிழா.., கொடியேற்றத்துடன் தொடக்கம்!

 
பனிமய மாதா பேராலயம்
 


 
பனிமய மாதா பேராலயத்தின் 443-வது ஆண்டு திருவிழா நேற்று கொடி பவனியுடன் தொடங்கி, இன்று (ஜூலை 26) கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது.  இந்த உலகப் புகழ்பெற்ற பேராலயத்தில் ஆண்டுதோறும் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 6 வரை 11 நாட்கள் திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.

இன்று உள்ளூர் விடுமுறை! பனிமய மாதா திருவிழா!

அந்த வகையில், இன்றுடன் கொடியேற்ற நிகழ்ச்சியைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 3 ம் தேதி  நற்கருணை பவனி மற்றும் ஆசீர், ஆகஸ்ட் 4 அன்று மாதா கோவிலைச் சுற்றி சப்பர பவனி, ஆகஸ்ட் 5 அன்று நகர வீதிகளில் மாதா சப்பர பவனி, மற்றும் ஆகஸ்ட் 6 அன்று கொடியிறக்கம் நடைபெறும்.

பனிமய மாதா

இந்த திருவிழாவிற்காக  முன்னிட்டு தூத்துக்குடி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. இன்றைய தினம் திருவிழா கொடியேற்றத்தில் கலந்துகொள்ள அதிகாலை முதலே பக்தர்கள் கோவிலில் குவிந்து வருகின்றனர்.  கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  ‘மரியே வாழ்க’ என விண்ணை பிளக்க பக்தர்கள் முழக்கமிட்டனர். கொடி கம்பத்தில் பனிமய மாதா ஆலய கொடி கம்பீரமாக ஏற., சமாதானச் சின்னமாக வெள்ளைப் புறாக்கள் வட்டமடித்தது. கொடியேற்றத்தைத் தொடர்ந்து, பனிமய மாதா சொரூபத்துக்கு பொன் மகுடம் மற்றும் ஆபரணங்கள் அணிவிக்கப்படுகின்றன.விழாவின் 10வது நாள் அன்னையின் திருவுருவ சப்பர பவனி வெகு விமரிசையாக நடைபெறுகிறது, இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?