ஆண்கள் மட்டுமே பங்கேற்ற திருவிழா.. 280 கிடாய் வெட்டி விடிய விடிய கறி விருந்து!

 
சிவகங்கை கோவில்

வறட்சி மாவட்டங்களில் சிவகங்கை மாவட்டமும் உள்ளது. விவசாயத்திற்கு போதிய தண்ணீர் இல்லாததால் பல இடங்கள் தரிசாக உள்ளது. ஆனால் சிவகங்கை மாவட்ட விவசாயிகள் பல்வேறு சிரமங்களை மீறி விவசாயம் செய்து வருகின்றனர். தென்னை, மா, மிளகாய், நெல் விவசாயத்தில் சிறப்பாகச் செய்து வருகின்றனர். வறட்சியைத் தாங்கும் மானாவாரி பயிர்களை நடவு செய்வதில் முன்னேற்றம் கண்டு பல விவசாயிகள் விருதுகளைப் பெற்றுள்ளனர். இந்நிலையில், சிவகங்கை அருகே உள்ள கண்மாயில் உள்ள மடையை கிராம மக்கள் 280 கிடா வெட்டி வழிபாடு செய்தும், கிடா விருந்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

சிவகங்கையை அடுத்துள்ளது திருமலை கிராமம். இங்குள்ள விவசாய நிலங்களுக்கு நீராதாரமாக விளங்கும் கண்மாயில், இக்கிராம மக்கள், மடையை கருப்பணசாமியாகக் கருதி, விவசாய காலத்தில் தண்ணீர் திறந்து விடப்படும் மடையை வழிபடுகின்றனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு இந்த விழா கொண்டாடப்பட்டது. இங்கு விருப்பத்தை நினைத்து பிரார்த்தனை செய்வதும், விருப்பம் நிறைவேறினால் ஆண்டு தோறும் ஆண்கள் மட்டும் பங்கேற்று கருப்பு நிற வெள்ளாடுகளை மட்டும் மாடைக்கருப்பண சாமிக்கு காணிக்கையாக வழங்குவது வழக்கம். இந்நிலையில், இந்த ஆண்டு கிராம மக்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறியதன் பலனாக 280 கருப்பு ஆடுகளை காணிக்கையாக செலுத்தி மாடைக்கருப்பண்ண சாமிக்கு பலியிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

அதன்பிறகு கிராம மக்கள் கெளலி வரம் கேட்டு, அதைப் பெற்றுக் கொண்டு பச்சரிசி சாதம், மணம் கலந்த கறி, ரசம் வைத்து விருந்து படைத்தனர். இந்த விருந்தில், அந்த கிராமத்தை சேர்ந்த ஆண்கள் மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டு கறி விருந்தில் மகிழ்ந்தனர். விவசாய சீசன் முடிந்து, மடையை குலதெய்வமாகக் கருதி, ஆண்கள் மட்டுமே விருந்தில் பங்கேற்று, திருவிழாவில் பங்கேற்கும் இந்த விழா, அப்பகுதியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
 இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

From around the web