ஜூன் 15ம் தேதி புதிய அமைச்சரவையின் முதல் கூட்டத் தொடர்!

 
பாராளுமன்றம்

 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 15ம் தேதி தொடங்கும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.நாளை இரவு 8 மணிக்கு பிரதமர் உட்பட புதிய அமைச்சரவை பதவியேற்க உள்ளது.  ஜூன் 3 வது வாரத்தில் முதல் அமர்வு தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 2 நாட்களுக்கு சத்தியப்பிரமாணம் தொடர வாய்ப்புள்ளதாகவும், அதைத் தொடர்ந்து புதிய சபாநாயகர் நியமிக்கப்படுவார் எனவும் அதிகாரப்பூர்வ  வட்டாரங்கள் தெரிவித்தன.  

பாராளுமன்றம்
அடுத்த நாள், லோக்சபா மற்றும் ராஜ்யசபாவின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றுவார். புதிய அமைச்சரவையின் முதல்  கூட்டத்தொடரை குடியரசுத் தலைவர் தான் முதன் முறையாக துவக்கி வைப்பார்.  இந்த அமர்வில்  ​​பிரதமர் மோடி தனது அமைச்சர்கள் குழு உறுப்பினர்களை இரு அவைகளுக்கும் அறிமுகப்படுத்துவார்.  

பாராளுமன்றம்
கூட்டத்தொடர் ஜூன் 22ம் தேதி நிறைவடையலாம் எனத் தெரிகிறது.  ஞாயிற்றுக்கிழமை இரவு  ராஷ்டிரபதி பவனில் நடைபெறும் பதவியேற்பு விழாவுக்குப் பிறகு அமைச்சரவை விரைவில் கூடும்.   நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.  543 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில்  தேசிய ஜனநாயகக் கூட்டணி  இணைந்து 293 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web