பீகாரில் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது... ஆர்வமுடன் குவிந்த வாக்காளர்கள்!
பீகார் மாநில சட்டசபைத் தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலையுடன் தொடங்கியது. இத்தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. அதன்படி, இன்று 121 சட்டசபைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்த தொகுதிகளில் மொத்தம் 3 கோடி 75 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் 10 லட்சத்து 72 ஆயிரம் பேர் புதிய வாக்காளர்கள். அவர்களில் 7 லட்சத்து 38 ஆயிரம் இளைஞர்கள் 18 மற்றும் 19 வயது பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மொத்தம் 1,314 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 122 பெண்கள், ஒரே ஒரு திருநங்கை வேட்பாளரும் உள்ளார். முக்கிய வேட்பாளர்களில் இந்தியா கூட்டணியின் முதல்-அமைச்சர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் (ரகோபூர்), அவரது அண்ணன் தேஜ்பிரதாப் யாதவ் (மஹுவா), துணை முதல்-அமைச்சர் சாம்ராட் சவுத்ரி (தாராபூர்), முன்னாள் சபாநாயகர் விஜய் குமார் சின்ஹா (லக்கிசாரை) உள்பட பலர் அடங்குகின்றனர். மொத்தம் 16 அமைச்சர்கள் இக்கட்டத்தில் களமிறங்கியுள்ளனர்.
45,341 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலானவை கிராமப்புறங்களில் உள்ளது. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். மாலை 5 மணிவரை வரிசையில் நிற்கும் வாக்காளர்கள் அனைவருக்கும் வாக்களிக்க அனுமதி வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சமூக அமைதி மற்றும் பாதுகாப்பு உறுதி செய்ய, 1,650 கம்பெனி பாதுகாப்புப் படைகள் நியமிக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகள் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. முதல்கட்ட வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
