இன்றுடன் மலர்க்கண்காட்சி நிறைவு!! காலை முதலே குவியத் தொடங்கிய பொதுமக்கள்!!

 
செம்மொழி பூங்கா

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் , திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா ஜூன் 3ம் தேதி கோலாகலமாக  நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஒடிசா ரயில் விபத்து   காரணமாக அன்றைய தினம் துக்க நாளாக அனுசரிக்கப்பட்டது. இதனால்  அன்றைய தினம் அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.

செம்மொழி பூங்கா

இதன் ஒரு பகுதியாக சென்னை செம்மொழிப் பூங்காவில்  ஜூன்  3ம் தேதி முதல் மலர் கண்காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. 5000 பானை செடிகள், பல்வேறு வகையான பூக்கள், பழங்கள் என ஒரே இடத்தில் இதனை  காணும் வாய்ப்பு சென்னைவாசிகளுக்கு கிடைத்துள்ளது எனலாம். பெரியவர்களுக்கு ரூ 15 மற்றும் குழந்தைகளுக்கு ரூ10ம்  நுழைவு கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது.

செம்மொழி பூங்கா

காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை மலர் கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது  செம்மொழி பூங்காவிற்கு வந்து செல்ல  150 மாதாந்திர பாஸ்  வைத்திருப்பவர்கள் எப்போதும் போல வந்து செல்லலாம். இவர்களுக்கு கட்டணம் எதுவுமில்லை. இந்நிலையில் ஜுன்  3ம் தேதி தொடங்கிய மலர்க்கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது. 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web