மான் வேட்டையாடி சமைத்து சாப்பிட்ட கும்பல்.. கையும் களவுமாக கைது செய்த போலீசார்!

 
மான் வேட்டை

கொடைக்கானலில் பெரும்பாலான இடங்கள் காடாகவே உள்ளது. இந்த காடுகளில் மான், காட்டெருமை, சிறுத்தை, புலி உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் உள்ளன. தொடர்ந்து இந்த வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி நகர்ப்புறங்களுக்குள் நுழைவது மட்டுமின்றி நகர்ப்புறங்களை ஒட்டியுள்ள பகுதிகளிலும் உலா வருகின்றன.

மரம் காடு வனம் கொடைக்கானல் மேற்குத் தொடர்ச்சி தேனி

இந்நிலையில் கொடைக்கானல் வாழைகிரி பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் சிலர் மானை வேட்டையாடி சமையலுக்கு தயார் செய்துள்ளனர். மேலும், அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் வைரலானதை அடுத்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ரோந்து சென்றனர். பின்னர் சமையலுக்கு வைத்திருந்த மான் மற்றும் சமைத்த மான்களை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

கைது

இதையடுத்து, இச்சம்பவத்தில் தொடர்புடைய செல்வகுமார், ராஜேஷ் கண்ணன், அஜித், சிவராமன், ராமகிருஷ்ணன், பிரவீன் ஆகிய 6 பேரை வனத்துறையினர் கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர். மேலும் வேட்டையாட பயன்படுத்திய இருசக்கர வாகனம், டிராக்டர், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர்கள் பல்வேறு வேட்டை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனரா என்பது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web