மூன்று மாதங்களாக மாயமான சிறுமி.. குகையில் திடீரென பாம்பு அவதாரம் எடுத்ததால் அதிர்ச்சி !

ஜார்க்கண்டில் கான் என்று ஒரு பகுதி உள்ளது. இந்த பகுதியில் ராணி குப்தா தாம் என்ற குகை உள்ளது. இந்த குகையில் சாமி இருப்பதாக அப்பகுதி மக்கள் நம்பி அங்கு வந்து தரிசனம் செய்வது வழக்கம். அந்த வகையில் அங்குள்ள குகையில் சாமி தரிசனம் செய்ய சிலர் சென்றுள்ளனர். அப்போது ஒரு சிறுமி பாம்பு போல் உடலை வளைத்து நாக்கை வெளியே நீட்டிக் கொண்டு படுத்திருந்தாள். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த சிலர் வீடியோ எடுத்தனர்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, சிறுமியின் குடும்பத்தினர் கூறியதாவது: மூன்று மாதங்களுக்கு முன், எங்கள் மகள் காணாமல் போனார். பல இடங்களில் தேடியும் அவளை காணவில்லை. இந்த வீடியோவைப் பார்த்த பிறகுதான் அவள் குகையில் இருக்கிறாள் என்பது தெரிய வந்தது என்றார்கள். இதையடுத்து, சிறுமியை வணங்கி, இசைக்கருவிகள் முழங்க வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!