சிறுமிக்கு தாலி கட்டி பாலியல் பலாத்காரம்.. இளைஞருக்கு அதிரடியாக தண்டனை வழங்கிய நீதிமன்றம்!

 
விக்னேஷ்குமார்

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் விக்னேஷ்குமார் (30). இவர் திருவள்ளூர் மாவட்டத்தை மையப்படுத்தி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், 2021-ம் ஆண்டு கொரோனா காலத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதிலிருந்து அவர் தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது, ஆரணிக்கு 14 வயது சிறுமி கடத்திச் செல்லப்பட்டு பஸ்சில் தாலி கட்டியுள்ளார். மேலும், சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

காதலிப்பதாக கூறி சிறுமி தொடர்ந்து பலாத்காரம்!! கர்ப்பமானதும் தப்பிக்க நினைத்த இளைஞர்!! திருச்சியில் கைது!

இதுகுறித்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் கீழப்பாப்புவூர் போலீஸார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், இந்த வழக்கு அரியலூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து, இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

சிறுமி வன்கொடுமை வழக்கில் ஒரேநாளில் நீதிமன்றம் தீர்ப்பு..!!

குற்றம் சாட்டப்பட்ட விக்னேஷ்குமாருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி செல்வம் தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் விக்னேஷ்குமார் போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web