இளம்பெண் நடந்து சென்ற சாலையில் மளமளவென இடிந்து விழுந்து சுவர்… பதற வைக்கும் வீடியோ!
ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகரான ராஞ்சியில் நேற்று பெய்த கனமழையால் சுவர் இடிந்து விழுந்தது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. அதே நேரத்தில் அந்த பாதையில் நடந்துகொண்டிருந்த ஒரு பெண் உயிர் தப்பியதை காணும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக வைரலாகி வருகிறது.
இது குறித்து வெளியான வீடியோவில், கனமழையால் தண்ணீர் தேங்கி நனைந்திருந்த பாதையில் அந்தப் பெண் இடது பக்கமாக நடந்து செல்வதைக் காணலாம். அவள் நடந்து வந்த பாதையின் வலது பக்கம் இருந்த சுவர் திடீரென இடிந்து விழுகிறது.
மிக மிக அருகில் அந்தச் சுவர் இடிந்தபோதிலும், பாதையின் எதிர் பக்கமாக நடந்து வந்த காரணத்தால் அந்தப் பெண் எந்த காயமும் ஏற்படாமல் தப்பியிருக்கிறார். இது நடந்து முடிந்ததும் அந்தப் பெண் ஒருநிமிடம் அதிர்ச்சியில் உறைந்து நிற்கும் காட்சியும் வீடியோவில் பதிவாகியுள்ளது. பின்னர், உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக்கொண்டு, அப்பகுதியை விட்டு அவள் நகர்ந்துவிட்டார்.

ஜார்க்கண்டில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு, சுவர் இடிவுகள் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன. இதனையடுத்து, இந்திய வானிலை ஆய்வு மையம் மாநிலத்தின் பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் கட்டிடத் துறையில் நிலைத்தன்மை பணிகளையும் முன்னெடுக்க உடனடி நடவடிக்கைகள் அவசியம் என்பதையும் இச்சம்பவம் சுட்டிக் காட்டுகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
