க்யூட் வீடியோ... விஜய்யை வாழ்த்தி எம்ஜிஆர் பாடலை பாடிய பெண்... வெட்கப்படும் தளபதி !

 
விஜய்


 
தவெக தலைவர்  விஜய் தமிழகம் முழுவதும் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு உதவித்தொகையும், விருதும் வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே ஜூன் 28ம் தேதி 21 மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டு முடிந்த நிலையில் 2ம் கட்டமாக 18 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 700 மாணவ, மாணவியர்களுக்கு இன்று கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்றது.  இந்த விழா சென்னை திருவான்மியூரில் உள்ள திருமண மண்டபத்தில் காலை 10 மணிக்கு தொடங்கியது. இங்கு அறுசுவை சைவ விருந்து பரிமாறப்பட்டது.

 இந்த விழாவில் பல க்யூட்டான விஷயங்களும் நடந்து வருகிறது. மாணவர்கள் மற்றும் மாணவர்களுடைய பெற்றோர்கள் விஜய்யை புகழ்ந்து பேசியது வைரலாகி வருகிறது. இதற்கு விஜய் கொடுக்கும் ரியாக்சனும்   வைரலாகி வருகிறது.அந்த வகையில் பெண் ஒருவர் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் பாடலை பாடினார். மேடைக்கு வந்ததும் அந்த பெண் ” அண்ணனுக்காக நான் ஒரே ஒரு பாடலை மட்டும் பாடுகிறேன்.

விஜய்

அண்ணனை பார்த்தால் எம்.ஜி.ஆரை பார்த்தது போல இருக்கும் என கூறிவிட்டு நீங்கள் நல்லா இருக்கோணும்  நாடு முன்னேற இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற” என பாடி அசத்தினார்.இந்த பாடலை பாடியவுடன் விஜய் வெட்கப்பட்டு சிரித்துக்கொண்டே நகர்ந்தார்.  அந்த பெண்ணின் பின்னால் நின்று சிரித்துக் கொண்டு இருந்தார்.  இந்த வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web