வேலைக்கு சென்ற சிறுமியிடம் கைவரிசை.. கையும் களவுமாக சிக்கிய அண்ணன், தம்பி!

 
ராமு  - கார்த்திக்

அதிகாலை பஸ்சுக்காக காத்திருந்த பெண்ணிடம் செல்போனை பறித்த அண்ணன், தம்பியை அரும்பாக்கம் போலீசார் கைது செய்தனர். சென்னை அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம்பெண். இவர் அம்பத்தூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். தினமும் அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனியில் இருந்து தனியார் பஸ்சில் ஏறி செல்வார். கடந்த 11ம் தேதி பஸ்சுக்காக காத்திருந்த போது செல்போனில் பேசிக்கொண்டிருந்தார்.

செல்போன்

அப்போது ஹெல்மெட் அணிந்து பைக்கில் வந்த 2 பேர் சிறுமியிடம் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பினர். அப்போது, ​​ ​​‘திருடன் திருடன்’ என சப்தமிட்டதால்,   பொதுமக்கள் சிலர் அவர்களை துரத்திச் சென்றபோது,பைக்கை விட்டு ஓடிவிட்டார். சிறுமியின் புகாரின் பேரில் அரும்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமராவில் பதிவான பைக் எண்ணை வைத்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.

இளம் நடிகர் கைது

இந்நிலையில் நேற்று அரும்பாக்கம் மார்க்கெட் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது 2 பேரை விரட்டி சென்று விசாரணையில் பிடித்தனர். அதையடுத்து, அந்த எண்ணை சோதனையிட்டபோது, ​​ திருடப்பட்ட பைக் என்பது தெரிய வந்ததையடுத்து, என்பது தெரிந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில், பிடிபட்டவர்கள் கொள்ளையர்கள் ராமு (எ) ராமு பிரசாத் (24), அவரது தம்பி கார்த்திக் (22) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 3 செல்போன்கள் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர். இதையடுத்து, இருவரும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web