உல்லாசத்திற்கு வர மறுத்த காதலி... கொலைவெறியுடன் தாக்கிய காதலன்... வைரலாகும் வீடியோ!

 
லுப்னா

நிமிஷ நேர ஆத்திரம், மனிதனை எத்தனை கேவலமான மிருகமாய் மாற்றுகிறது என்பது தினம் தினம் பல குற்றச்செயல்களுக்கு ஆதாரங்களாக விளங்குகின்றன. மனிதன், மிருகமாவது அந்த ஒரு நிமிட தருணத்தில் தான் என்றாலும், அதன் பின்னர், அவனது வாழ்க்கையே திசைமாறி, சுனாமி சுழற்றிப் போட்ட தோட்டமாய் மாறி விடுகிறது. அப்படித் தான் சந்தோஷமாக மும்பையில் சுற்றித் திரிந்த காதலர்களின் வாழ்க்கையிலும் அன்று சூறாவளி வீசியுள்ளது. கடற்கரையில், தன்னுடன் உல்லாசமாக இருக்க சம்மதிக்காத காதலியை கொலை வெறியோடு தாக்கியிருக்கிறான் காதலன். அதோடு நிற்காமல், நீரில் அமுக்கி கொலைச் செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெண்ணின் அலறல் சப்தம் கேட்டு, அங்கிருந்தவர்கள் திரண்டு வந்து, இளம்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.


மகாராஷ்டிரா மாநிலம் மும்பை கல்யான் நகரைச் சேர்ந்தவர் ஆகாஷ். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும், ஆகாஷூம், அதே நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் லுப்னாவும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த புதனன்று இருவரும் ஜோடியாக மும்பையின் பல பகுதிகளுக்கு சுற்றித் திரிந்தனர். 

Murder

காலையில் இருந்து மும்பை முழுவதும் சுற்றி திரிந்த காதல் ஜோடி, மாலையில் பாந்த்ரா அருகேயுள்ள கடற்கரைக்கு சென்றுள்ளனர். அங்கே இரவு நேரம் நெருங்கியதும், தான் லூப்னாவை வீட்டில் விடுவதாக ஆகாஷ் கூறியுள்ளார். அதன் பின்னர், விரைவில் திருமணம் செய்து கொள்கிறேன் எனக் கூறி, தன்னுடன் உல்லாசத்திற்கு வருமாறு காதலியை வற்புறுத்தியுள்ளார். 

திடீரென இப்படி வலுக்கட்டாயமாக ஆகாஷ் கேட்டதையடுத்து, உல்லாச உறவுக்கு மறுத்துள்ளார். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த ஆகாஷ், லூப்னாவின் கழுத்தை நெரித்து, அருகிலிருந்த பாறையை நோக்கி லூப்னாவின் தலையை ஓங்கி அடித்துள்ளார். அப்படியும் ஆத்திரம் தீராமல், லூப்னாவை கடலில் தள்ளி நீரில் மூழ்கடித்து கொல்ல முயற்சித்துள்ளார்.

வலி தாங்காமல் லூப்னாவின் அலறல் சத்தத்தைக் கேட்ட அக்கம் பக்கத்தினர், விரைந்து ஓடி சென்று ஆகாஷிடம் இருந்து லூப்னாவை மீட்டு, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், காதலியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, ஆகாஷை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

.

From around the web