நடுரோட்டில் காதலைச் சொன்ன காதலி... சிரித்துக் கொண்டே சர்ப்ரைஸ் கொடுத்த காதலன்.. வைரலாகும் வீடியோ!

 
காதல் ப்ரோபோஸ்

அமெரிக்காவில் பூங்கா ஒன்றுக்கு செல்லும் வழியில் நடுரோட்டில் மண்டியிட்டு தனது காதலைச் சொன்ன காதலிக்கு சர்ப்ரைஸ் கொடுத்து காதலன் செய்த காரியம் இணையதளங்களில் வீடியோவாக வெளியாகி வைரலாகி வருகிறது.

கலிபோர்னியாவின் டிஸ்னிலேண்ட் பூங்காவிற்கு தம்பதி, குடும்பத்தினர் என பலரும் பொழுதுபோக்கிற்காக வந்தனர். அவர்களில், காதல் ஜோடி ஒன்று, தங்களது அன்பை பரிமாறி கொண்டிருந்தது. அப்போது, காதல் வசப்பட்ட அந்த இளம்பெண் முன்பே யோசித்து வைத்திருந்தபடி, காதலரின் முன்பு மண்டியிட்டு தனது அன்பை க்யூட்டாக வெளிப்படுத்தினார். 

திருமணம் செய்து கொள்ளலாம் என்பதற்கான எண்ண வெளிப்பாடாக மோதிரம் ஒன்றையும் எடுத்து காண்பித்து உள்ளார். ஆனால், இதனை கண்ட காதலர் கடகடவென சிரித்துடன், காதலியின் அன்பை ஏற்காமல் நின்றுள்ளார். இதனால், என்ன செய்வதென தெரியாமல் சற்று நேரம் காதலி திகைத்து போயுள்ளார்.

Propose

ஆனால், அந்த காதலர் அடுத்து நடந்து கொண்டது காதலியை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. காதலியின் முன்னே சற்று குனிந்தபடி தனது அரைக்கால் சட்டையில் இருந்த பெட்டி ஒன்றை எடுத்து உள்ளார். அதில் இருந்த மோதிரம் ஒன்றை கையில் எடுத்து, அவரும் மண்டியிட்டு காதலை வெளிப்படுத்தினார். 

காதலியை போன்று காதலரும் கூட, பூங்காவுக்கு இதே யோசனையுடன் வந்துள்ளார். இருவருக்கும், மற்றவரின் யோசனை தெரியவில்லை. ஆனால், அவர்களின் காதலை போன்று, எண்ணமும் ஒன்றாகவே இருந்தது. இதனால், இருவரும் அடக்க முடியாமல் சிரிப்பை வெளிப்படுத்தினர். 

இந்த வீடியோ, வைரலாகி வருகிறது. இதற்கு 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக்குகளை குவித்து உள்ளனர். எங்களுக்கும் கூட இதேபோன்று அனுபவம் ஏற்பட்டது என்றும், நாங்கள் கணவன், மனைவியாக இருக்கிறோம் என்றும் ஒருவர் தெரிவித்து உள்ளார். இதனால், எங்களிடம் 4 நிச்சயதார்த்த மோதிரங்கள் உள்ளன என்றும் தெரிவித்து உள்ளார்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web