பாதாளச் சாக்கடையில் சிக்கிய அரசுப் பேருந்து!
தமிழகம் முழுவதும் சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் சாலைகளில் பள்ளங்கள், ஆங்காங்கே ஒரு வழிப்பாதைகள் என வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றன. அந்த வகையில் கோவையில் பாதாள சாக்கடை பணிகள், குடிநீர்க் குழாய் பதிக்கும் பணிகள், சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அனைத்து பணிகளும் முடிவடைந்த பிறகு சோதனை செய்வதற்காக சில இடங்களில் சரிவர அவை மூடப்படாமல் உள்ளது. பாதாள சாக்கடை பணிகள் முடிந்து மூடாமல் விடப்பட்ட சாலையில் அரசுப் பேருந்தின் சக்கரம் சிக்கியது. கோவை மதுக்கரை மார்க்கெட் சாலையில் அரசுப் பேருந்து சக்கரங்கள் மண்ணில் சிக்கிக் கொண்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பாதாள சாக்கடை அமைப்பதற்கு சாலையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் அதன்பிறகு தோண்டப்பட்ட பள்ளங்கள் சரியாக மூடப்படாமல் இருந்திருக்கலாம். அதனால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்துத்துறையினர் பாரந்தூக்கியால் பேருந்தை மீட்டனர். அதன்பிறகு அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் சீரமைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
