அரசு மரியாதை விண்ணப்பம் குறித்து அரசு முடிவெடுத்து கொள்ளலாம்... நீதிபதி கருத்து!

 
ஆம்ஸ்ட்ராங்

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை தமிழகம் முழுவதும் பெரும் பதற்றத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசு மரியாதையுடன் கூடிய நல்லடக்கத்திற்கான விண்ணப்பம் குறித்து அரசு முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று நீதிபதி பவானி தெரிவித்துள்ளார்.

ஆம்ஸ்ட்ராங்

முன்னதாக ஆம்ஸ்ட்ராங் உடல் திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் நல்லடக்கம் செய்வதற்கு உறவினர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். இன்று மாலை 5 மணிக்கு இறுதி ஊர்வலம் துவங்குகிறது. ஆம்ஸ்ட்ராங் உடலை பெரம்பூர் பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்கக் கோரி வழக்கு. ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி உள்ளிட்டோர் தரப்பில் தொடர்ந்த வழக்கில் அரசு தரப்பில் ஐகோர்ட்டில் பதில் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. அரசு மரியாதை வழங்கக் கோரிய விண்ணப்பம் மீது அரசு முடிவெடுத்துக் கொள்ளலாம் என நீதிபதி பவானி சுப்பராயன் தெரிவித்துள்ளார்.

ஆம்ஸ்ட்ராங்

தமிழ்நாடு அரசு பெருந்தன்மையுடன் செயல்பட்டுள்ளதாக நீதிபதி பவானி சுப்பராயன் கருத்து தெரீத்துள்ளார். அனைத்து ஒத்துழைப்பையும் அரசு வழங்கும் என்று அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் கூறியுள்ளார். ஆம்ஸ்ட்ராங் உடலை பெரம்பூர் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்கக் கோரிய வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!