6 பேருக்கு மறுவாழ்வு அளித்த பெண்ணுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு!!

 
ஹேமாவதி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்   கணேஷ் நகரில் வசித்து வருபவர்   கணேசன். இவருடைய   மனைவி ஹேமாவதி . இவர்களுக்கு 17 வயதில் யோகிதா என்ற மகளும் , 12 வயதில் பிரவீண்குமார் என்ற மகனும் உள்ளனர்.  அக்டோபர் 25ம் தேதி ஹேமாவதி  தீராத தலைவலி காரணமாக ஓசூர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது மூளையில்  புற்றுநோய் ஏற்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை

நேற்று ஹேமாவதி மூளைசாவு அடைந்ததாக மருத்துவர்கள் கூறி உள்ளனர். இதனைத் தொடர்ந்து ஹேமாவதியின் உடல் உறுப்புக்களை அவரது கணவர் மற்றும் குழந்தைகள்  தானமாக வழங்க முன்வந்தனர். அதன் அடிப்படையில் அவரது சிறுநீரகங்கள், கண்கள், தோல்  என   6 பேருக்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக மாற்றம் செய்யப்பட்டது. 
 

உறுப்பு தானம்

தம் இறப்பிலும்   பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில், தமிழக அரசு  இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குபவரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என அறிவித்திருந்தது.  அதன்படி ஹேமாவதியின் உடலுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் பல அதிகாரிகள்   மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அதன் பிறகு ஓசூர் வெங்கடேஷ் நகரில் உள்ள மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.இச்சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web