சபாஷ்... பொதுத்தேர்வில் சாதித்த மாணவ, மாணவிகளை ஹெலிகாப்டரில் அழைத்துச் சென்ற மாநில அரசு!

 
கல்வி

காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும், சத்தீடீஸ்கர் மாநிலத்தில் கல்வியின் தரத்தை உயர்த்தவும், மாணவர்களிடம் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தவும் அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்.

முதலமைச்சர் பூபேஷ் பாகேல் அண்மையில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்லப்படுவார்கள் என அறிவித்திருந்தார். அதன்படி தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், முதல் இடங்கள் பிடித்த மாணவர்களின் பட்டியல் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது.

கல்வி

பின்னர் மாணவ, மாணவிகளை ஹெலிகாப்டரில் அழைத்துச்செல்வதற்கான ஏற்பாடுகளை அம்மாநில அரசு செய்து வந்தது. இந்நிலையில் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஹெலிகாப்டர் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் 88 மாணவர்கள் ஹெலிகாப்டரில் பயணம் செய்தனர். 

சத்தீஸ்கர் ராய்பூரிலிருந்து மாணவர்கள் ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்லப்பட்டனர். பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இந்த முயற்சி அமைந்துள்ளது.

கல்வி

கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தில், 125 மாணவர்கள் ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொண்டனர். இந்நிலையில், 2023ம் ஆண்டுக்கான 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வில், அதிக மதிப்பெண்கள் பெற்ற 89 மாணவர்கள், ராய்ப்பூரில் இருந்து ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்லப்பட்டனர்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web