ஆளுநர் வெளிநடப்பு.. இன்று திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

 
திமுக

இன்று ஆளுநர் வெளிநடப்பைக் கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. நேற்று தமிழக சட்டப்பேரவையில் இந்த வருடத்தின் முதல் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், வந்த வேகத்திலேயே அடுத்த மூன்றே நிமிடங்களில் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்தார். தேசிய கீதம் பாடவில்லை என்று ஆளுநர் தரப்பில் கூறப்பட்டது.

இந்நிலையில் ஆளுநரை கண்டித்து திமுக சார்பில் இன்று ஜனவரி 7ம் தேதி  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து  வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் கீதாஜீவன், மற்றும் தெற்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

சட்டப்பேரவை

அதில் “தமிழக ஆளுநர் அவர்கள் தமிழ்நாட்டையும், தமிழக மக்களையும் தொடர்ந்து வஞ்சித்து வருகிறார். அதன் உச்சக்கட்டமாக சட்டப்பேரவையில் காலகாலமாக கடைபிடித்து வரும் மாண்பை மீறும் வகையில் தமிழ்த்தாய் வாழ்த்தை பாடவிடாமல் அவமானப்படுத்தியுள்ளார். தமிழகத்தின் உரிமைகளில் தொடர்ந்து அத்துமீறல் செய்து வருகிறார்.  

சட்டப்பேரவை

தொடர்ந்து தமிழ்நாட்டையும், தமிழக மக்களையும், தமிழ்த்தாய் வாழ்த்தையும் அவமானப்படுத்தும் தமிழக ஆளுநரை கண்டித்து ஜனவரி 7ம் தேதி  மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்திட வேண்டும் என திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.  

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி வடக்கு, தெற்கு மாவட்டக் கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, நகர ஒன்றிய பகுதி, பேரூர், கிளை மற்றும் வார்டு கழக செயலாளர்கள், நிர்வாகிகள், மாவட்ட பிரதிநிதிகள், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், கழக தோழர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர்.  

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web