கல்யாணத்தை பாதியிலேயே நிறுத்திய மணமகன்.. கூறிய காரணத்தால் அதிர்ச்சி அடைந்த மணப்பெண்!

 
அமீர் ஆலம்

உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகரில் அமீர் ஆலம் மற்றும் ஒரு பெண்ணுக்கு நேற்று திருமணம் நடைபெற இருந்தது. சடங்குகளின் ஒரு பகுதியாக, மணமகன் மணமகள் வீட்டிற்கு வருவதற்காக மணமகளின் குடும்பத்தினர் காத்திருந்தார்கள். ஆனால் நேரம் கடந்தும் மணமகன் வரவில்லை. இறுதியில், மணமகன் திருமணத்தை நிறுத்தியதை அறிந்த மணமகள் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.


திருமணம் நிறுத்தப்பட்டதற்கான காரணம் குறித்து அவரிடம் கேட்டபோது அதிர்ச்சி தகவல் கிடைத்தது. பெண்ணின் தாயிடம் ஹூண்டாய் க்ரெட்டா காரை மணமகன் சீதனமாக கேட்டதாகவும், ஆனால் அவர்கள் மாருதி காரை பரிசாக அளித்ததாகவும், அதிருப்தி அடைந்த மணமகன் திருமணத்தை நிறுத்தியதாகவும் தெரியவந்ததால் பெண்ணின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்நிலையில், திருமணம் பாதியில் நின்றதை அறிந்து சோகத்தில் ஆழ்ந்துள்ள மணப்பெண், தனது  நிலை குறித்தும், குடும்பத்தினரின் துயரம் குறித்தும், இதுபோன்ற ஆண்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்றும் கவலையுடன் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்நிலையில், மணப்பெண் வீட்டார் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய மணமகனை தேடி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web