மோடி, புதின் சந்திப்பு... ஜனநாயகமும், குற்றவாளியும்... குமுறும் உக்ரைன் அதிபர் !

 
இந்தியா ரஷ்யா உக்ரைன்

 பிரதமர் மோடி ரஷ்ய பயணத்தை சாடிய உக்ரைன் அதிபர்.! ஜனநாயகமும்.. குற்றவாளியும்..
 இந்திய பிரதமர் மோடி 2 நாள் அரசு முறை பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். அங்கு அவருக்கு உற்சாக சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில்  பிரதமர் மோடியின் ரஷ்ய பயணத்தை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார்.
2022, பிப்ரவரி  முதல் உக்ரைன் மீது ரஷ்யா தொடர் தாக்குதலை  நிகழ்த்தி வருகிறது. நேற்று உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் குழந்தைகள் மருத்துவமனையில் நடத்தப்பட்ட திடீர் தாக்குதலில்  இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். 170க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.  
கீவ் நகரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் நிகழ்ந்த தாக்குதலால் மட்டுமே 3 குழந்தைகள் உட்பட 36 பேர் உயிரிழந்துள்ளனர்.

 கீவ் நகர் உட்பட டினிப்ரோ, கிர்வி ரிஹ், சுலோவன்ஸ்க், கர்மட்ரோஸ் உள்ளிட்ட நகரங்களின் இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளது.
உக்ரைனில் தாக்குதல் நடந்த நேற்றைய தினம் தான் பிரதமர் மோடி ரஷ்யாவுக்கு 2 நாள் பயணமாக சென்றது குறிப்பிடத்தக்கது .  மோடி 22வது இந்தியா – ரஷ்யா மாநாட்டில் கலந்துகொண்டு இரு நாட்டு உறவை பலப்படுத்தும் வகையில்  ரஷ்ய அதிபரை சந்தித்துள்ளார்.  
இந்நிலையில், ரஷ்ய அதிபர் புதினுடன், இந்திய பிரதமர் மோடி சந்திப்பு குறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்நிகழ்வை மறைமுகமாக குறிப்பிட்டு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விமர்சனம் செய்துள்ளார். தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில்  ” ரஷ்யாவின் கொடூரமான ஏவுகணைத் தாக்குதலின் விளைவாக உக்ரைனில் இன்று, 37 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.  70 பேர் படுகாயம் அடைந்தனர். 


உலகின் மிகப்பெரிய தலைவரின் சந்திப்பில் இந்நிகழ்வு பெரும் ஏமாற்றமே. அமைதியின் முயற்சிகளுக்கு இந்த தாக்குதல்கள் பேரழிவை தரலாம். உலகின் மிக பயங்கரமான   குற்றவாளியை  உலகின் மிக பெரிய ஜனநாயக தலைவர்  நேற்று தாக்குதல் நடைபெற்ற நாளில் சந்தித்துள்ளார் என்பது பெரும் சோகமே.  அதை பார்க்கும்போது அமைதியை நிலைநாட்டுவதற்கான முயற்சி தோற்றதைப்போல ஒரு ஏமாற்றத்தை தருகிறது

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web