அதிர்ச்சி வீடியோ... கை, கால்களை கட்டிப்போட்டு இளைஞருக்கு சராமாரி அடி!
ராஜஸ்தான் மாநிலத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவரை கட்டிப்போட்டு அடித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு நெட்டிசன்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ராஜஸ்தானில் மாட்டு தொழுவத்தில் பணிபுரியும் ஊழியர் ராமேஸ்வர் வால்மீகி .
गौशाला में काम करने वाले रामेश्वर वाल्मीकी को
— Tanmay srivastav (लाला जी) (@Tanmay807676) May 21, 2024
शराब माफियाओं ने लाठी इतना पीटा की उसकी मौत हो गयी .
घटना राजस्थान के झुंझुनू के सूरजगढ़ थाने की बताई जा रही हैं जिसमें पीड़ित युवक के हाथ और पांव बांधकर बदमाश लाठी-डंडे से उसकी पिटाई करता है।
मारने वाले बदमाश शराब कारोबारी थे ,शराब… pic.twitter.com/x1tfZQhHVy
இவரின் கால்களை கயிற்றால் கட்டி படுக்க வைத்து கட்டை மற்றும் கம்பியால் கண்மூடித்தனமாக தாக்கினர். அதுமட்டுமல்லாமல் அவரை தலைகீழாக தொங்கவிட்டு உள்ளங்காலிலும் தாக்குதல் தொடர்ந்தது.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். அந்த ஊழியர் என்ன குற்றம் செய்திருந்தாலும் தண்டிக்கும் உரிமை நீதிமன்றத்துக்கு மட்டுமே உள்ளது . குற்றம் சாட்டப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
