இன்று ஓய்வு பெற இருந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்!

 
ஜீவா ஹட்சன்

 கோவை மாவட்டத்தில்  ஆலந்துறை அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியை ஜீவா ஹட்சன். இந்தப் பள்ளியில் சுமார் 600க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இதே பள்ளியில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர் ஆனந்தகுமார், அப்பள்ளியில் படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது குறித்து அப்பள்ளியில் படிக்கும்  மாணவி போலீசாரிடம் புகார் அளித்தார்.

போக்சோ நீதிமன்றம்


அதன்பேரில், போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து ஆனந்தகுமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வழக்கில்  மாணவி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீது புகார் அளித்தும் பள்ளி தலைமை ஆசிரியை ஜீவா ஹட்சன் மற்றும் ஆசிரியர்கள் அதனை மறைத்ததாக தெரிகிறது.

போக்சோ விழிப்புணர்வு கையேடு

இதையடுத்து, பள்ளி தலைமை ஆசிரியை உட்பட 6 ஆசிரியர்கள் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு விசாரணை நடந்து வந்தது.இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவிக்கு அதே பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து வரும்  ராஜ்குமார் மிரடட்ல் விடுத்தார். இதன் அடிப்படையில் அவர் 2023 டிசம்பர் 22ம் தேதி சஸ்பண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் இன்று ஜூன் 30ம் தேதி ஓய்வுபெற இருந்த தலைமை ஆசிரியை ஜீவா ஹட்சன் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web