பகீர் வீடியோ... சீட்டுக்கட்டு போல் சரியும் மலைப்பகுதி !

 
நிலச்சரிவு

உத்தரகாண்ட் மாநிலத்தில் நிலச்சரிவுகள் அடிக்கடி ஏற்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக மழை பெய்யும் போதெல்லாம் நிலச்சரிவுகள் ஏற்பட்டு பெரும் விபரீதங்களையும் ஏற்படுத்தி விடுகிறது.   அந்த வகையில் தற்போது பித்தோராகரில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  இதனால் அங்கு போக்குவரத்து முடங்கியதால் சாலையை சரி செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


நிலச்சரிவுகளை தடுக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் இங்கு ஒவ்வொரு ஆண்டும் பருவமழை தொடங்கும் முன்னரே பல்வேறு தடுப்பு முறைகளையும்,  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இருந்த போதிலும் நிலச்சரிவு ஏற்பட்டு விடுகிறது.  

நிலச்சரிவு

இதனை சரி செய்யும் வகையில் இன்னும் தீவிரமாக ஆய்வு செய்து மத்திய மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் சீட்டுக்கட்டு போல் மலைப்பகுதி சரிந்து விழுந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web