ஆசிரியரை கொடூரமாக குத்திக் கொன்ற மாணவன்!

 
சிவசேகர் நகர் அரசுப் பள்ளி

அசாம் மாநிலம் சிவசேகர் நகர் அரசுப் பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆசிரியர் ஒருவர் பாடம் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது வகுப்பறையில் மாணவர் ஒருவர் படத்தை கவனிக்காமல் சக மாணவர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்தார். இதை கவனித்த ஆசிரியர் மாணவனை  திட்டி வகுப்பறையை விட்டு வெளியே அனுப்பியுள்ளார்.

வெளியே சென்ற மாணவன் அங்குள்ள ஒரு கடைக்கு சென்று கத்தியை வாங்கி சிறிது நேரம் கழித்து மீண்டும் வகுப்பறைக்கு வந்துள்ளார். வகுப்பறைக்கு வந்த மாணவனை ஆசிரியர் கண்டித்ததால் ஆத்திரமடைந்த மாணவன் சக மாணவர்கள் முன்னிலையிலேயே  கத்தியை எடுத்து ஆசிரியரை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த ஆசிரியர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார்.

தற்கொலை

இதை பார்த்த சக மாணவர்கள் அலறியடித்துக்கொண்டு வகுப்பறையை விட்டு வெளியே ஓடினர். பின்னர் ஆசிரியரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியில் இருந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் ஆசிரியரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து குற்றவாளியான மாணவர் கைது செய்யப்பட்டார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web