சென்னையில் பரபரப்பு... கஞ்சா வியாபாரிகள் அட்டூழியம்... போலீசார் மீது கொலைவெறி தாக்குதல்!
சென்னையை அடுத்த துரைப்பாக்கம் கண்ணகி நகரைச் சேர்ந்தவர் உமாபதி. இவர் மீது கஞ்சா விற்பனை, கொலை முயற்சி உள்பட 9க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் தகராறில் சின்னாவையும், தினேஷையும் வெட்டியதாக கூறப்படுகிறது. புகாரின் பேரில் நேரில் சென்ற கண்ணகி நகர் போலீசார் 2 பேர் உமாபதியை விசாரணைக்கு காவல் நிலையம் வருமாறு அழைத்தனர்.
அப்போது உமாபதி மற்றும் அவரது நண்பர்கள் 2 போலீசார் மீது கற்கள் மற்றும் கைக்கால்களால் தாக்கினர்.மேலும் உமாபதியின் நண்பர் ஒருவர் பீர் பாட்டிலை உடைத்து உடலில் கீறல் போட்டுள்ளார். மேலும் போலீசாரை கத்தியால் குத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் 2 பேரும் போலீசார் மீது பெரிய கற்களை வீசிவிட்டு தப்பியோடினர்.

காயமடைந்த 2 போலீசார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தப்பியோடிய கஞ்சா வியாபாரிகள் உமாபதி மற்றும் அவரது நண்பரை கண்ணகி நகர் போலீஸார் தேடி வருகின்றனர். கஞ்சா வியாபாரிகள் போலீசாரை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் புத்தாண்டில் பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
