மருத்துவமனை ஊழியர் நோயாளியின் வயிற்றில் குத்திய கொடூரம்... பகீர் வீடியோ!

 
மருத்துவமனை


 மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் செயல்பட்டு வரும்  மருத்துவமனையில் நோயாளி ஒருவரை  மருத்துவமனை ஊழியர் ஒருவர் தாக்கும்  வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில்  மருத்துவமனை ஊழியர் வயதான நோயாளியின் வயிற்றில் தனது முழங்கையால் அடிப்பது மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.ஜூன் 19ம் தேதி  பதிவான  சிசிடிவி காட்சிகளுடன் உள்ளது. இந்த இடம் குறித்த சரியான தகவல் இல்லை.  இருப்பினும் வீடியோ மிகவும் வைரலாகி வரும் நிலையில், வீடியோவை பார்த்த நெட்டிசன்கள்  கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

நோயாளிக்கு எதிராக கொடூரமான செயலைச் செய்த ஊழியர் யார் என  அடையாளம் காணப்படவில்லை. இருப்பினும், அவரது மனிதாபிமானமற்ற இந்த அதிர்ச்சியான  செயலுக்கு கண்டிப்பு தெரிவித்துள்ளனர். இதில்  ”ஒரு உடல் நலம் சரியில்லாதவரை இப்படியா தாக்குவது? எனவும் கண்டிப்பாக தாக்கிய அந்த ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் ” எனவும் பதிவிட்டுள்ளனர்.  நோயாளியை தாக்கிவிட்டு யாராவது பார்த்துவிட்டார்களோ என சுற்றும் முற்றும்  பார்த்துவிட்டு  கேமரா இருப்பதை கவனித்த அவர் வேகமாக தப்பி ஓடியதும் அதில் பதிவாகியுள்ளது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web